Sunday, September 28, 2008

சேலத்தில் பாஜக கூட்டத்தில் பெரியார் திக குண்டர்கள் அட்டூழியம்

திமுக ஆளும் தமிழகத்தில் இப்படி கலவரங்களும், அடிதடிகளும் அடாவடிகளும் திகவினரால் அதிகமாக செய்யப்பட்டுவருகின்றன.

சேலம்: பாஜக-பெரியார் திக கடும் மோதல்-பைக் எரிப்பு
சனிக்கிழமை, செப்டம்பர் 27, 2008




சேலம்: சேலத்தில் பாஜகவினருக்கும், பெரியார் திராவிட கழக தொண்டர்களுக்கும் இடையே இன்று பயங்கர மோதல் மூண்டது. பெரியார் திக தொண்டர்களை பாஜகவினர் சரமாரியாக தாக்கினர். அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் தீவைத்துக் கொளுத்தப்பட்டது.

சேலத்தில் இன்று மாநில பாஜக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. சேலம் இரும்பாலை சாலையில் உள்ள கல்யாண மண்டபத்தில் இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பதற்காக அகில இந்திய பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் வருகிறார்.

இந்த நிலையில் விழா நடைபெறும் மண்டபத்திற்கு இன்றுகாலை கொளத்தூர் மணி தலைமையில் பெரியார்திராவிட கழகத்ைதச் ேசர்ந்த 50க்கும் மேற்பட்ட தொண்டர்கள் திரண்டு வந்தனர்.

கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் சங் பரிவார் அமைப்பைச் சேர்ந்த பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் இங்கு வரக்கூடாது என்று கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைப் பார்த்த பாஜகவினர் திரண்டு வந்து அவர்களை எதிர்த்து போராட்டத்தில் இறங்கினர். இதனால் இரு தரப்பினரும் அடித்துக் கொள்ளும் நிலைமை ஏற்பட்டது.

இதையடுத்து போலீஸார் விைரந்து வந்து இருதரப்பினரையும் விலக்கி விட முயன்றனர். ஆனால், பெரியார் திராவிட கழகத்தினர் மண்டபத்திற்குள் நுழைய முயன்று முன்னேறினர். இதைப் பார்த்து பாஜகவினரும் அவர்களுடன் மோத ஓடி வந்தனர். இதனால் இரும்பாலை சாலை போர்க்களம் போல மாறியது.

இந்த நிலையில் அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த பெரியார் திராவிட கழக தொண்டர்கள் சிலரை பாஜகவினர் மடக்கிப் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்தனர். இதில் பைக் பாதி எரிந்து போனது.

இதையடுத்து பெரியார் திராவிட கழகத்தினரை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

எச்.ராஜா கண்டனம்:

பெரியார் திராவிட கழக தொண்டர்கள் நடத்திய போராட்டத்திற்கு பாஜக பொதுச் செயலாளர் எச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், பாஜக பொதுக்குழுவை நடத்த விட மாட்டோம். ராஜ்நாத் சிங் வந்தால் தாக்குவோம் என ஏற்கனவே பெரியார் திராவிட கழகத்தினர் எச்சரிக்ைக விடுத்திருந்தனர். இதையடுத்து போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களைக் கைது செய்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை.

இன்று பொதுக்குழுக் கூட்டத்திற்காவது போதிய பாதுகாப்பு அளித்திருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை. காவல்துறையின் நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது என்றார்.

பாஜக - பெரியார் திராவிட கழக மோதலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

No comments: