உள்ளாட்சி இடைத் தேர்தல்: சரத் கட்சிக்கு 3 இடங்களில் வெற்றி
ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 21, 2008
சென்னை: உள்ளாட்சி இடைத் தேர்தலில் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி ஆதரவுடன் களம் கண்ட 3 வேட்பாளர்கள் கவுன்சிலர்களாகியுள்ளனர்.
சமீபத்தில் நடந்த உள்ளாட்சி மன்ற இடைத் தேர்தலில் பெருவாரியான இடங்களில் திமுகவுக்கு வெற்றி கிடைத்துள்ளது.
சென்னை மாநகராட்சியின் 2 வார்டுகளிலும் திமுக வென்றது. நகராட்சிகளில் திமுக 2 இடங்களிலும், அதிமுக ஒரு இடத்திலும், சுயேச்சை ஒரு இடத்திலும் வென்றுள்ளன.
மூன்றாம் நிலை நகராட்சிகளில் திமுக, அதிமுக சம நிலையில் வென்றுள்ளன. நகர பஞ்சாயத்துக்களிலும் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் கிட்டத்தட்ட சம வெற்றிகள் கிடைத்தன.
உள்ளாட்சி இடைத் தேர்தலில் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கும் வெற்றிப் பழம் கிடைத்துள்ளது.
நெல்லை மாவட்டம் சேந்தமடம் பேரூராட்சி 2வது வார்டு தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி ஆதரவுடன் போட்டியிட்ட மாரீஸ்வரி என்பவர் 308 வாக்குகள் பெற்றும், கரிவலம்வந்த நல்லூர் பேரூராட்சியின் 1வது வார்டு தேர்தலில் போட்டியிட்ட முருகன் என்ற வேட்பாளர் 473 வாக்குகள் பெற்றும் வெற்றி பெற்றுள்ளனர்.
இதேபோல கன்னியாகுமரி மாவட்டம் திப்பிரமலை பேரூராட்சியின் 2வது வார்டு தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி ஆதரவுடன் போட்டியிட்ட அருள்ராஜ் என்பவர் 175 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
1 comment:
பரவாயில்லையே!
Post a Comment