Saturday, September 27, 2008

கோவில்கள் மீது திகவினர் தாக்குதல் செய்யலாம்: ஆனால் சர்ச்சுகள் மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை: கருணாநிதி

திகவினர் திமுகவினர் கோவில்கள் மீது தாக்குதல் நடத்தலாம். இந்துக்களது மத நம்பிக்கையை புண்படுத்தலாம்.

ஆனால் சர்ச்சுகள் மீது தாக்குதல் யாரேனும் நடத்தினால் மட்டும் அவர்கள் மீது நம்பிக்கை எடுக்கப்படுமாம்.
சர்ச்சுகள் மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை: கருணாநிதி
சனிக்கிழமை, செப்டம்பர் 27, 2008




சென்னை: தமிழகத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தி வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: ஒரிஸ்ஸா, கர்நாடகம் போன்ற மாநிலங்களில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது நடைபெற்ற தாக்குதல்களைத் தொடர்ந்து தமிழகத்திலும் ஆங்காங்கு சில கிறிஸ்தவ ஆலயங்களின் மீது கல்லெறிதல் போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக தகவல்கள் வந்துள்ளன.

எந்தவிதமான மத மாச்சரியங்களுக்கும் இடமில்லாத வகையில், தற்போது தமிழகம் அமைதியான மாநிலமாக திகழ்கிறது.

இதைக் கண்டு பொறுக்காத சிலர் இதுபோன்ற வன்முறைகள், அராஜகங்களில் யாராவது ஈடுபட்டு தமிழகத்தில் நிலவிடும் மத நல்லிணக்கத்திற்கும், மனித நேயத்துக்கும் இழுக்கினை ஏற்படுத்துகின்ற வகையில், நடந்து கொள்ள முற்படுவார்களேயானால் அதனை இந்த அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.

மேலும் அத்தகைய செயல்களைக் கண்டிப்பாக அனுமதிக்காது என்பதோடு அதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தமிழக காவல்துறை தனது கடமை உணர்ந்து உடனடியாக சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கவும் தயங்காது என்பதை எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

No comments: