Saturday, September 20, 2008

இஸ்லாமிய பயங்கரவாதிகளை கொன்று மக்களை காப்பாற்றிய வீரர் மோகன் சந்த் சர்மா: அஞ்சலி


வீரர் மோகன் சந்த் சர்மா: அஞ்சலி
~ ஆசிரியர் குழு | நாள்: 2008-09-20 | பார்வை: 7 | அச்சிட


‘பாரத் மாதா கி ஜே’ எனும் கோஷங்களுடன் மோகன் சந்த் சர்மாவின் உடல் இன்று எரியூட்டப்பட்டது. டெல்லி குண்டு வெடிப்புகளுக்கு காரணமான பயங்கரவாதிகளை பிடிக்க சென்ற போது பயங்கரவாதிகளின் குண்டுகளுக்கு பலியான காவல் துறை அதிகாரிதான் மோகன் சந்த் ஷர்மா. அவரது பதினான்கு வயது மகன் திவ்யன்ஷு டெங்கு காய்ச்சலால் மருத்துவமனையில் இருப்பதால் தன் தந்தையின் சிதைக்கு எரியூட்ட அவனால் வரமுடியவில்லை.

அன்று மருத்துவமனையில் இருக்கும் தன் மகனுடன் இருக்க விடுப்பு எடுக்க இருந்த சர்மா பயங்கரவாதிகள் குறித்த தகவல் கிடைத்ததும் அங்கே விரைந்தார். பயங்கரவாத எதிர்ப்பு அணியின் முன்னால் இருந்து செயல்பட்ட சர்மா பல குண்டு காயங்களை மார்பில் தாங்கி பின்னர் அறுவை சிகிச்சையின் போது இறந்தார்.

இதுவரை தமது கடமையில் 35 பயங்கரவாதிகளை உயிரிழக்க செய்த இந்த மாவீரர் தேசத்துக்காகவும் நம் அனைவரின் பாதுகாப்புக்காகவும் தமது சொந்த குடும்பத்தைக் கூட கவனிக்காமல் தனது உயிரை பலிதானமாக்கியுள்ளார்.

நமது போலி மனித உரிமை வாதிகள், விலைக்கு போன ஊடகங்கள் பொதுவாக குண்டு வைத்தவர்களை, அல்லது குண்டுவைத்தலின் பின்னால் மூளையாக செயல்பட்டவர்களை ஏதோ அப்பாவிகளாக சித்தரிப்பதில் பெயர் பெற்றவர்கள். மதானி, அப்சல் போன்றவர்களின் மகன்கள் மனைவிகள் உருக்கமாக காட்டப்படும் அதே நேரத்தில் வெடிகுண்டுகளால் சிதறி இறந்தவர்களின் உறவினர்கள், அல்லது நம்மை - இந்த மனித உரிமையாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உட்பட- நம் அனைவருடையவும் பாதுகாப்புக்காக உயிர் துறந்தவர்களின் தியாகத்தின் கனத்தை, அவர்கள் குடும்பங்களின் சோகங்களை அவை நம் பிரக்ஞையில் பதிய வைப்பதே இல்லை.

இந்நிலையில் தமிழ் இந்து.காம் நம் அனைவருடைய பாதுகாப்புக்காகவும் தன் குடும்பத்தையும் கவனிக்காமல் தன்னை பலிதானமாக்கிய இந்த வீரத்திருமகனுக்கு அஞ்சலி செய்கிறது. அதே நேரத்தில் மருத்துவமனையில் இருக்கும் அவரது மைந்தனுக்கும், இரத்த அழுத்ததத்தால் மயக்கமடைந்து இருக்கும் அவரது மனைவிக்கும், அவரது உடலை பெற்றுள்ள அவரது தந்தைக்கும் - அவர்களின் இந்த தாங்க இயலாத சோகத்தில் பங்கு கொள்கிறது.

தொடர்புடைய செய்திகள்:

http://www.rediff.com/news/2008/sep/20del.htm
http://specials.rediff.com/news/2008/sep/19sli1.htm
http://afp.google.com/article/ALeqM5i5vFKxudPUp5HOeIS7nfSET05auA

No comments: