Tuesday, September 16, 2008

முஸ்லீம் பயங்கரவாதிகளை விடுதலை செய்யக்கோரி முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டம்

கோவையில் குண்டுவைத்ததற்காக ஆயுள்தண்டனை பெற்றுவரும் முஸ்லீம் பயங்கரவாதிகளை விடுதலை செய்யக்கோரி முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்
குண்டு வெடிப்பு கைதிகளுக்கு விடுதலை கோரி மறியல்
செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 16, 2008


கோவை: கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சிறையில் உள்ள
கைதிகளை விடுதலை செய்யக்கோரி கோவை சிறை முன்பு பெண்கள் உள்பட பலர்
மறியலில் ஈடுபட்டனர்.


அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக சிறைகளில் இருந்த 1405 ஆயுள்
தண்டனை கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. இதனைத்
தொடர்ந்து, கோவை சிறையில் ஆயுள் தண்டணை பெற்ற 296 கைதிகள் நேற்று
விடுதலை செய்யப்பட்டனர்.


கோவை சிறையில் குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற அல்-
உம்மாவினர் உள்பட 68 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களையும் விடுதலை
செய்யக் கோரி இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் தங்கள் குழந்தைகள்
மற்றும் உறவினர்களுடன் சிறை முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அவர்களை தடுக்க போலீஸார் முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த ஆர்டிஓ பாலசந்திரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்.
மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். கோரிக்கை மனுவை
தந்தால் அரசுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார்.


இதையடுத்து அவர்கள் கோரிக்கை மனுவை அளித்தனர். பின்னர் அனைவரும் கலைந்து
சென்றனர். அதன் பேரில் அவர்களை விடுவிடுக்க கோரி அவர்களது உறவினர்கள்
எழுதிக் கொடுத்த மனுவை பெற்றுக் கொண்டு அரசுக்கு அணுப்பி வைப்பதாக
உறுதி கூறியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.


இதையறிந்த குண்டு வெடிப்பு கைதிகள், தங்களையும் விடுதலை செய்யக்கோரி பாஷா
தலைமையில் சிறைக்குள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விடுதலை செய்வதில்
பாரபட்சம் கூடாது என்று அவர்கள் கோஷமிட்டனர். இதனால் சிறைக்குள் பதட்டம்
ஏற்பட்டது. போலீஸார் அவர்களை சமரசம் செய்தனர்.

No comments: