Wednesday, April 09, 2008

இஸ்லாமை தவறாக புரிந்துகொண்டவர்களுக்கு தமிழ்நாட்டு நீதிமன்றம் ஐந்தாண்டு சிறை

தீவிரவாதத்தில் இறங்கும் இஸ்லாமியர்கள் இஸ்லாமை தவறாக புரிந்துகொண்டவர்கள் என்று இஸ்லாமிய அறிஞர்கள் கூறுகின்றனர். அப்படிப்பட்ட ஐந்து பேருக்கு தமிழகத்தில் ஐந்தாண்டு சிறை வழங்கப்பட்டுள்ளது.

அல்-உம்மா தீவிரவாதிகளுக்கு 16 ஆண்டுகளுக்கு பின் தண்டனை
புதன்கிழமை, ஏப்ரல் 9, 2008



தூத்துக்குடி : காரில் வெடிகுண்டுகள், ஆயுதங்கள் கடத்திய வழக்கில், அல்-உம்மா தீவிரவாதிகள் ஐந்து பேருக்கு கோவில்பட்டி நீதிமன்றம், ‌ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.


கடந்த 1992-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 ம் தேதி, அல்-உம்மா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஹைதர் அலி, அப்துல் காதர், அப்துல் முத்தலிப் உள்ளிட்ட ஐந்து பேர், கோவில்பட்டியிலிருந்து வாடகை காரில் ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளை கடத்தி சென்றுள்ளனர்.


பாதி வழியில் டிரைவரை காரின் பின் பகுதியில் கட்டிபோட்டி விட்டு தீவிரவாதிகளில் ஒருவர் காரை ஓட்டிச் சென்றுள்ளார். திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் அருகிலிருந்த மரத்தில் மோதி விபத்திற்குள்ளானது.

இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, கோவில்பட்டி கிழக்குபிரிவு போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இவ்வழக்கின் தீர்ப்பு இன்று கோவில்பட்டி நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது.


இதில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேருக்கும் தலா ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பதினாறு ஆண்டுகளுக்கு பின் இந்த வழக்கில் பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments: