வாழ்க வளமுடன்
--
நன்றி தினமலர்
27 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் செல்லும்; கிரீமி லேயர் கிடையாது : சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
புதுடில்லி : மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு சட்டம் செல்லும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
ஐ.ஐ.டி., போன்ற உயர் கல்வி நிலையங்களில் பிற்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்தது.
ஐ.ஐ.டி., போன்ற உயர் கல்வி நிலையங்களில் பிற்பட்ட மாணவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதற்கு மத்திய அரசு கடந்தாண்டு ஆணை பிறப்பித்தது. இதை எதிர்த்து டில்லி உட்பட பல நகரங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அரசின் இம்முடிவை எதிர்த்து பலர், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். முதலில் இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி அரிஜித் பசாயத், `உயர் கல்வி நிலையங்களில் பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் திட்டத்தை ஒரு ஆண்டு நிறுத்தி வைக்கும்படி' உத்தரவிட்டார். இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் , இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது.
இதில்ஓ.பி.சி., பிரிவினருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு சட்டம் செல்லும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. மேலும் ஓ.பி.சி., சான்றிதழில் கிரீமி லேயர் இருக்காது எனவும் கூறியுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இடஒதுக்கீடு பட்டியல் புதுப்பிக்கப்படும்
No comments:
Post a Comment