தேனி: இரட்டை டம்பளர் முறைக்கு எதிராக தலித் மக்கள் போராட்டம்!
திங்கள்கிழமை, அக்டோபர் 1, 2007
தேனி:
நன்றி தட்ஸ்டமில்
தேனி மாவட்டத்தில் தீண்டாமை தலைவிரித்தாடும் பகுதிகளில், இரட்டை டம்பளர் முறை கடைப்பிடிக்கப்படுவதை எதிர்த்து தலித் மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் இன்னும் தீண்டாமைக் கொடுமை தலைவிரித்தாடுகிறது. பல கிராமங்களில் உள்ள டீக்கடைகளில், தலித் மக்களுக்கு ஒரு டம்பளர், மற்றவர்களுக்கு ஒரு டம்பளர் என இரட்டை டம்பளர் முறை நடைமுறையில் உள்ளது.
தேனி மாவட்டத்தின் பல பகுதிகளில் பெரும்பாலான கிராம புற டீ கடைகளில் உயர் ஜாதியினர்க்கு ஒரு கிளாஸிலும், தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்களுக்கு வேறு கிளாஸிலும் டீ வழங்கப்படுவதாக தலித் மக்கள் புகார் கூறுகின்றனர்.
வீரபாண்டி மற்றும் சுற்றுப்புற கிராம டீக் கடைகளில் இந்தத் தீண்டாமைக் கொடுமை அதிக அளவில் உள்ளது. இது குறித்து பல்வேறு சேவை அமைப்புகளும், தலித் அமைப்புகளும் அரசு அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் நடவடிக்கை எதுவும் இல்லை.
இதையடுத்து இந்த ஊர்களில் உள்ள டீக் கடைகளில் புகுந்த தலித் அமைப்பினர் அங்கு வைக்கப்பட்டிருந்த கண்ணாடி கிளாஸ்களை உடைத்து எறிந்து போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் தலித் அமைப்பினரை சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்
1 comment:
50 வருடங்கள் கழக ஆட்சியின் சாதனை!
இருக்கவே இருக்குது பார்ப்பனர் மீது பழி போடுவது...
Post a Comment