Wednesday, August 08, 2007

தமிழ்நாட்டு இந்துக்கோவில்களில் முஸ்லீம் கும்பல் திருடுகிறதா?

கோபுர கலசம் திருடும் கும்பல் ஓட்டம்: சிறுவனை பிடித்த மக்கள்



ஈரோடு: ஈரோடு பகுதி கோயில்களில் உள்ள கோபுரங்களில் இருந்து கலசங்களை திருடும் கும்பல், நேற்றும் தனது கைவரிசையை காட்டியது. பொதுமக்கள் விழித்துக் கொண்டதால் அக்கும்பல் தப்பியது. கோபுரத்தில் இருந்து இறங்க முடியாமல் தவித்த சிறுவன் பிடிபட்டான். ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று கொங்காலம்மன் கோயில். கொங்காலம்மன் மூலவராக உள்ளார். கோயில் வலதுபுறத்தில் பிரத்தியேங்கர ஸ்வாமி, கணபதிசன்னதிகளும். இடது புறத்தில் கன்னி மூலை கணபதி, சப்த கன்னியர், பேச்சியம்மன், தாட்டேரி, முனியப்பன், அகோர வீரபத்திரர் ஆகிய ஸ்வாமி சன்னதிகள் உள்ளன. நேற்று நள்ளிரவு 1.15 மணி அளவில் மர்ம கும்பல் ஒன்று கோயில் பின்புறத்தில் மரத்தின் வழியாக கன்னி மூலை கணபதி சன்னதிக்குள் ஏறியது. கும்பலில் ஐந்து பேர் இருந்துள்ளனர். இவர்கள் கணபதி சன்னதியில் இருந்து செம்பு கலசத்தை கழற்றிக் கொண்டனர். அப்போது, கோயில் காவலாளி சுந்தரராஜன், முன்னாள் ராணுவ வீரர் சத்தியமூர்த்தி ஆகியோர் இதைப் பார்த்து சத்தம் போட்டனர். திருட்டு கும்பல் அங்கிருந்து ஓடிவிட்டது.

இக்கும்பல் கச்சேரி வீதி காளமேகம் தெருவில் உள்ள எல்லை மாரியம்மன் கோயிலுக்கு சென்றது. கோயில் மீது இருந்த கலசங்களை திருடிக் கொண்டு இருந்த போது சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் எழுந்து சத்தம் போட்டனர்.

பொதுமக்கள் எழுந்து விட்டத்தை அறிந்த திருட்டுக்கும்பல், இரண்டு கலசங்களை மட்டும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டது. கோபுரத்தின் மீது ஏறி கலசங்களை திருடுவதற்கு ஒரு சிறுவனை கோபுரத்தின் மீது ஏற்றி உள்ளனர். அவனால் கோபுரத்தில் இருந்து கீழே இறங்க முடியவில்லை. கோயில் அருகில் உள்ள ஒரு வீட்டில் சுவரில் ஏறி, மாடியில் இருந்து ஒரு செடியில் ஒழிந்திருந்தான். செடி ஆடுவதை பார்த்து பொதுமக்கள் சிறுவனை பிடித்து, போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் அவனிடம் விசாரித்ததில், ஓடைப்பள்ளத்தை சேர்ந்த அப்பாஸ் (12) என்பது தெரியவந்தது. கடந்த சில நாட்களாக ஈரோடு நகரில் பல கோயில்களில் கலசங்கள் திருடப்பட்டு வருகின்றன.


நன்றி தினமலர்

No comments: