நெல்லையில் 3 தலித்கள் வெட்டிக்கொலை * ஒரு வாரத்தில் 11 பேர் கொலையான பரிதாபம்
திருநெல்வேலி : நெல்லை மாவட்டத்தில் நேற்று 3 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். கடந்த ஒருவாரத்தில் மட்டும் 11 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.திருநெல்வேலி மாவட்டத்தில் ஓய்ந்து போய்ந்திருந்த ஜாதிக்கலவரம் தற்போது மீண்டும் தனிப்பட்ட விரோதங்களால் தலையெடுக்கிறது. ஜாதியுடன் மத மோதலும் சேர்ந்துள்ளதால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். தென்காசியில் கடந்த 14ம் தேதி இருதரப்பினர் மோதிக்கொண்டதில் 6 இளைஞர்கள் பலியானார்கள். 5 பேர் காயமுற்றனர். அந்த சம்பவம் தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டனர். நெல்லை மாவட்டம் வீரவநல்லுõரை அடுத்துள்ள அரிகேசவநல்லுõரை சேர்ந்தவர் சுடலைமுத்து(38). இந்திய கம்யூ., இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளராக செயல்பட்டுவந்தார். தலித் சமூகத்தை சேர்ந்த அவர் தாமிரபரணி ஆற்றில் நடந்த மணல் கொள்ளை, குடிநீர் பிரச்னைகளுக்காக போராடியதால் தி.மு.க.,வினரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவருடன் சென்ற நாகராஜன்(24) என்ற வாலிபரின் விரல்கள் துண்டிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார். இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான பழனி என்பவர் அண்மையில் ஒரு கொலை வழக்கில் ஆயுள்தண்டனை அடைதார். எப்படியோ ஜாமீனில் வெளிவந்த அவர் இந்த பயங்கர சம்பவத்தை செய்துள்ளார். அவர் இன்னமும் கைது செய்யப்படவில்லை. அரிகேசவநல்லுõர் அருகே தாளையடிகாலனியில் நேற்று ஆறுமுகராஜ்(40) என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இவரும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்தான். இவர் எந்த பிரச்னைக்கும் போகாதவர் என அக்கம்பக்கத்தில் கூறினர். இந்திய கம்யூ.,பிரமுகர் கொலை நடந்த பகுதிக்கு அருகே இந்த கொலையும் நடந்துள்ளது.

நன்றி தினமலர்
No comments:
Post a Comment