Thursday, August 23, 2007

வாதிட்ட சமணர்களை சைவர்கள் கொன்றதாக திரும்பத்திரும்ப பொய் எழுதப்படுகிறது.

வாதிட்ட சமணர்களை சைவர்கள் கொன்றதாக திரும்பத்திரும்ப பொய் எழுதப்படுகிறது.
அதற்கான ஒரு மீள் பதிவு

http://suvanappiriyan.blogspot.com/2006/12/blog-post.html


//அடுத்து நான் இஸ்லாமியன் என்பதால் இஸ்லாத்தை உயர்த்திப் பேசுவேன். அரவிந்தன்
பிராமணர் என்பதால் இந்து மதத்தை உயர்த்திப் பேசுவார். இது மனிதனின் இயற்கை. எனக்கு
இஸ்லாத்தில் அதிக விபரம் இல்லாமல் வாதத்தில் நான் தோற்கலாம். இதே போன்ற நிலைமை
அரவிந்தனுக்கும் ஏற்படலாம். இந்த ஒரு விவாதத்தை வைத்து இஸ்லாத்தையும் இந்து
மதத்தையும் எப்படி எடை போட முடியும்? இதே அளவு கோலை சமணர்களுக்கும் சைவர்களுக்கும்
வைத்துப்பாருங்கள்.ஒரு வாதத்தில் சரியான விபரம் இல்லாமல் தோற்றால்
கழுவிலேற்றுவதுதான் மனிதாபிமானமா? அவர்களே ஒத்துக் கொண்டிருந்தாலும் இதை
செயல்படுத்திய மன்னன் நேர்மையாளன் என்று எப்படி சொல்ல முடியும்? அடுத்துஒரு
இடத்தில் வாதம் செய்தால் குறைந்தபட்சம் ஐந்திலிருந்து பத்து பேர் வரை அமர்ந்து
வாதம் செய்ய முடியும். வாதப்படி சமணர்கள் தோற்றால் தோற்ற சமணர்களை தண்டிப்பதை
விடுத்து எட்டாயிரம் சமணர்களை ஒரே நேரத்தில் கழுவிலேற்றுவது எந்த வகை நியாயம்.//

சகோதரர் சுவனப்பிரியன் மேற்கண்டவாறு தன் பதிவில் எழுதியிருக்கிறார்.இதனைப்பற்றி இந்த பதிவில் எழுதியிருக்கிறேன் என்பதால், இங்கு எழுத முனைகிறேன்.வாதிட்ட சமணர்கள் சகோதரர் சுவனப்பிரியன் போன்று விபரம் தெரியாதவர்கள் அல்லர். சமண புலமை பெற்ற ஆச்சாரியர்கள். எல்லா சமணர்களின் சார்பாகவும் வாதிட வந்தவர்கள். அந்த காலத்தில் வாதிடும்போது சிலவற்றை வாதின் முன் பந்தயம் வைப்பர். அதாவது வாதில் தோற்றால் வாதில் வென்றவரின் சீடராக ஆவது போன்ற விஷயங்களை முடிவு செய்துகொள்வார்கள். மேலும் இந்த வாதம் நடக்கும்போது, அரசன் சமணர்கள் பக்கமே இருந்தான். சமணர்களே ஆட்சிஅதிகாரத்திலும் இருந்தனர். தங்களது வாதின் மீதிருந்த பெரும் கர்வத்தால், அவர்கள் தாங்கள் தோற்கவே முடியாது என்று இருமாந்திருந்தனர். அதனால், அவர்கள் தாங்கள் தோற்றால், கழுவின்மீது ஏறுவோம் என்று பகிரங்கமாக கூறிக்கொண்டனர். தோற்றபின்னரும் அவர்களுக்கு திருஞான சம்பந்தர் திருநீறு எடுத்துக்கொண்டு இறைவழி வரவே அழைத்தார். அவர்களோ மறுத்து, தங்களது சபதத்தை நிறைவேற்ற கோரியே தாங்களே கழுவின் மீது ஏறினர். இன்றும்கூட பலர் யார் தடுத்தும் கேளாமல் தற்கொலை செய்துகொள்கிறார்கள். பலரும் வந்து செல்லும் மார்க்கெட்டுகள், ஊர்களில், ஷியா பிரிவினர் மசூதிகளில் தங்கள் மீது வெடிகுண்டுகளை பொருத்திக்கொண்டு வெடித்து உயிர் துறக்கின்றனர். அவர்கள் அவ்வாறு செய்வதற்கு நாம் என்ன செய்ய முடியும்? அய்யா செய்யாதீர்கள். உங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்துக்கும் ஊருக்கும் நீங்கள் நல்லது செய்யலாம் என்றுதான் அறிவுரை கூறுகிறோம். அவர்கள் கேட்பதில்லையே. நீங்களும் யாரையும் கொல்ல வேண்டாம் என்று தான் கேட்கிறோம். அவர்கள் கேட்காததற்கு இன்றைய அரசாங்கமும் நாமும் என்ன செய்யமுடியும்?தலைமை தாங்கி வாதம் புரிந்த சமணத்தலைவர்கள் கழு ஏறினர். அந்த காலத்தில் நாட்டை விட்டு வெளியேறுதல், இறப்புக்கு சமமாக கருதப்பட்ட படியால், அங்கிருந்த மீதமிருந்த எண்ணாயிரம் சமணர்கள் நாடு விட்டு வெளியேறி பாலக்காடு சென்றனர். அஷ்ட சஹஸ்ரம் என்னும் பிரிவினராக இன்னும் அவர்கள் இருக்கிறார்கள். சம்பந்தரால் சைவநெறி அடைந்த அவர்கள் இன்று சைவ பிராம்மணர்களாக இருக்கிறார்கள்.மேலும் இன்று சமணர்கள் தமிழ்நாட்டில் இல்லை என்பது தவறான கூற்று. சமணர்கள் இன்னமும் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். நயினார் என்னும் பெயருடைய பல சமணர்களை இன்னமும் காஞ்சியில் பார்க்கலாம்.

இந்து நெறி அன்பு நெறி.

அங்கு வன்முறைக்கு இடமில்லை.

http://ezhila.blogspot.com/2006/12/blog-post_07.html#116561179265205109

No comments: