அமிர்தபுரி :"சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதில் தவறில்லை' என்று மாதா அமிர்தானந்தமயி கூறினார்.
அவர் கூறியதாவது:சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதால் என்ன குழப்பம் ஏற்படப் போகிறது. ஆண்களை பெற்றெடுத்தது பெண்களல்லவா. அப்படி இருக்கும் போது, ஆண்கள் சபரிமலைக்கு செல்லலாம்; அவர்களை ஈன்றெடுத்த பெண் செல்லக்கூடாது என்று சொல்வதில் என்ன தர்மம் இருக்கிறது. இறைவன் ஆண், பெண் வேறுபாடு உள்ளவர் அல்ல. பண்டைய காலத்தில் மலையில் பெண்கள் நடக்க முடியாது என்பதாலும், விலங்குகள் உலவும் என்பதாலும் பெண்கள் சபரிமலை செல்ல வேண்டாம் என்று கூறியிருக்கலாம்.காலம் மாறிய நிலையில் இதில் மாற்றம் வருவது நல்லது தான்.கோவில்களில் எல்லா நம்பிக்கையாளர்களையும் அனுமதிக்க வேண்டும் என்பது தான் எனது விருப்பம். கோவில், இறை நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே கோவில் வளாகத்தை சுத்தமாக வைத்திருப்பார்கள்.
இவ்வாறு அமிர்தானந்தமயி கூறினார்.
No comments:
Post a Comment