
ஆக்ராவில் கலவரம்!* லாரி மோதி நான்கு பேர் பலியானதால் முஸ்லீம்கள் ஆத்திரம்* ஒருவர் பலி; 50 பேர் படுகாயம்: ஊரடங்கு உத்தரவு அமல்
ஆக்ரா :ஆக்ராவில் ஒரு திருவிழா கூட்டத்தில் லாரி மோதி நான்கு பேர் பலியானதால் ஆத்திரமடைந்த முஸ்லீம்கள் மிகப் பெரிய கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் 22 வாகனங்கள் தீக்கிரையாக் கப்பட்டன.
போலீசார் நடத் திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். சரமாரியான கல்வீச்சில் உயர் அதிகாரிகள் உட்பட 50 போலீசார் படுகாயம் அடைந்தனர். அதில் நான்கு பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. சுமுக நிலையை ஏற்படுத்த ஆக்ராவின் பெரும்பான்மையான பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உ.பி.,யில் உள்ள ஆக்ராவில் நேற்று அதிகாலை `ஷாப்-இ- பராத்' என்ற நிகழ்ச்சியை முன்னிட்டு முஸ்லீம்கள் ஊர்வலமாக சென் றனர். திரும்பும் வழியில் லாரி ஒன்று மோதியதில் பைக்கில் வந்த இருவர், ரிக்ஷாவில் வந்த இருவர் என நான்கு இளைஞர்கள் பலியாகினர். அதிகாலை 2. 30 மணிக்கு இந்த விபத்து நடந்தது. இதை அறிந்ததும், முஸ்லீம்கள் மிகப் பெரிய கலவரத்தில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த 12 லாரிகள், இரண்டு தீயணைப்பு வாகனங்கள் உட்பட 22 வாகனங்கள், இரண்டு தொழிற்சாலைகள் ஆகியவை முஸ்லீம்களால் தீ வைத்து கொளுத்தப்பட்டன. சாலை மறியல் மற்றும் கலவரத்தால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவம் குறித்து அறிந்ததும் போலீசார் அப்பகுதிக்கு விரைந்தனர். ஆனால், போலீசார் மற்றும் அதிகாரிகள் மீது முஸ்லீம்கள் சரமாரியாக கற்களை வீசினர். இதில் கூடுதல் கலெக்டர் ராஜிவ் ரதுலா மற்றும் ஐந்து போலீஸ் அதிகாரிகள் உட்பட 50 போலீசார் படுகாயம் அடைந்தனர். அவர்களில் நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கலவரத்தை அடக்க போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட் டனர். அப்போது வீட்டின் கூரை மீது அமர்ந்து இருந்த ஒருவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து பலியானார்.இந்த கலவரத்தால் ஆக்ரா முழுவதும் பீதி ஏற் பட்டுள்ளது. ஆறு போலீஸ் நிலையங்களின் கட்டுப் பாட்டில் வரும் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக் கப்பட்டுள்ளது. ஆக்ராவில் நடந்த இந்த கலவரம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகமும் உ.பி., மாநில அரசிடம் விசாரணை நடத்தியுள்ளது. முதல்வர் மாயாவதி மற்றும் அமைச்சர் சதீஷ் சந்திரா மிஸ்ரா ஆகியோர் கவர்னர் ராஜேஸ்வரை நேரில் சந்தித்து சூழ்நிலையை விளக்கி கூறினர்.பதட்டத்தை தணிக்க அலிகார், மதுரா, மெயின்பூரி, எடா, பெரோசாபாத் ஆகிய மாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீசார் ஆக்ராவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இது தவிர அதி விரைவு படையினரும் ஆக்ராவில் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது சூழ்நிலை கட்டுப்பாட்டுடன் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆக்ராவில் உள்ள பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு மூன்று நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.ஆக்ராவில் நடந்த கலவரம் குறித்து உ.பி., உள்துறை முதன்மை செயலர் சாம்பர் கூறியதாவது:கலவரத்தில் ஒருவர் இறந்துள்ளார். ஊர்வலம் நடக்கும் பகுதியில் கனரக வாகனங்கள் செல்ல அப்பகுதியில் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதையும் மீறி லாரி ஒன்று அப்பகுதிக்குள் சென்றதே பிரச்னைக்கு காரணமாக இருந்தது. தடையை மீறி லாரி செல்ல அனுமதி அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு சாம்பர் கூறினார்.
தாஜ்மகால் சென்ற சுற்றுலா பயணிகள் தவிப்பு:ஊரடங்கு பிறப்பிக்கப் பட்ட பகுதிக்குள் தான் தாஜ்மகாலும் அமைந் துள்ளது. எனவே தாஜ் மகாலை பார்க்க வந்து பின் னர் ஓட்டலுக்கு சென்று தங்கிய சுற்றுலா பயணிகள், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், ஓட்டலை விட்டு வெளி யே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். இது குறித்து உள்துறை முதன்மை செயலர் சாம் பர் கூறுகையில்,` ஓட்ட லை விட்டு வெளியே வர வேண்டாம் என்று சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. அவர்களை பாதுகாப்பாக அனுப்பி வைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. கலவரத்தினால் தாஜ் மகாலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை' என்றார்.
1 comment:
ஹைதராபாதில் 50 பேர்களை இஸ்லாமிய பயங்கரவாதத்தில் இழந்த இந்து சமூகம் அமைதிகாக்கிறது.
4 பேர்களை விபத்தில் இழந்த முஸ்லீம்கள் பேயாட்டம் போடுகிறார்கள்.
எது அமைதிமார்க்கம்?
Post a Comment