நன்றி தினமணி
தமிழகத்தில் குண்டு வைக்க தீவிரவாதிகள் சதி: மத்திய உளவுப் பிரிவு எச்சரிக்கை
சென்னை, ஆக. 29: தமிழகத்தில் முக்கிய நகரங்களில் தீவிரவாதிகள் தாக்க சதி திட்டம் தீட்டியிருப்பதாக மத்திய உளவுப் பிரிவு (ஐ.பி) எச்சரித்துள்ளது.
இந்த எச்சரிக்கை செய்தி குறித்து, மாநில உளவுப் பிரிவு போலீஸýக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் மாநிலம் முழுவதும் போலீஸôர் உஷார் நிலையில் இருக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
ஹைதராபாதில் லும்பினி பூங்கா மற்றும் கோகுல் சாட் என்ற இரு வேறு இடங்களில் பயங்கர வெடிகுண்டு வெடித்தது. இதில் 40-க்கும் அதிகமானோர் பலியாகினார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஹைதராபாத் குண்டு வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுபோல வர்த்தக நகரம் மும்பை, அறிவியல் நகரம் பெங்களூரு ஆகிய இடங்களில் கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டு உள்ளது.
ஹைதராபாதில் தமிழக உளவு போலீஸ் ஆய்வு: ஹைதராபாதில் குண்டு வெடித்த இடங்களில் தமிழக உளவுத்துறையின் உயர் போலீஸ் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து திரும்பியுள்ளனர். அங்கு வெடிகுண்டு நிபுணர்கள், தடயவியல் நிபுணர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
ஹைதராபாத் குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் தீவிரவாதிகள் தாக்க சதி திட்டம் தீட்டியிருப்பதாக மத்திய உளவுப் பிரிவு (ஐ.பி.) எச்சரித்துள்ளது.
இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து நகரில் இரவு நேர வாகன சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகள், லாட்ஜ்களில் போலீஸôர் சோதனையிட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் சந்தேகத்துடன் சுற்றித் திரியும் நபர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் தீவிரவாதிகள் தாக்கலாம் என்பதால் விமான நிலையம், சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், வர்த்தக வளாகங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
67 ஐ.டி. நிறுவனங்களுடன் பாதுகாப்பு ஆலோசனை: அதேபோல சென்னையில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனங்களின் அதிகாரிகளுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தென்சென்னை இணை கமிஷனர் துரைராஜ், துணை கமிஷனர் சேஷசாயி தலைமையில் இந்தக் கூட்டம் நடந்தது. இதில் விப்ரோ, டிசிஎஸ், காக்னிஸன்ட், டைடல் பூங்காவில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனங்கள், அக்சென்சர் உள்ளிட்ட 67 நிறுவனங்களின் பொது மேலாளர்கள் பங்கேற்றனர்.
கம்ப்யூட்டர் நிறுவனத்துக்கு வரும் நபர்கள், வாகனங்களின் எண்கள் குறித்து பதிவு செய்ய வேண்டும். அக்ஸஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ரகசிய கேமிராக்கள் வைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கம்ப்யூட்டர் நிறுவனத்துக்குள் நுழையும் நபர்களை மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்தல், டோர் பிரேம் வைத்தல், சந்தேக நபர்கள் குறித்து போலீஸýக்கு தகவல் தெரிவித்தல், வாகனங்களை சோதனையிடுதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
திரையரங்குகள் மற்றும் வர்த்தக வளாகங்களின் உரிமையாளர்களுடன் போலீஸôர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கேட்பாரற்று கிடக்கும் பார்சல் மற்றும் பொருள்கள் குறித்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment