நன்றி தினபூமி
திருவண்ணாமலை, பிப்.
இந்துமதத்தில் எந்த விஷயத்தைப் பற்றி சொன்னாலும் அந்த விஷயம் நமக்கு நன்மை படிப்பதாக இருக்கிறதென்று சென்ற இதழில் எழுதியிருந்தேன்.
சில விஷயங்கள் நமக்கு மூட நம்பிக்கையைப்போல வெளித்தோற்றத்தில் காட்சியளிக்குகம். ஆனால் ஆழ்ந்து உட்புறமாகப் பார்த்தால், அதன் பயனோ நன்மை பிரமிக்கும்படி செய்யும். நாம் அவசர காலத்தில் வழ்வதால், இதையெல்லாம் சிந்திக்கும் அளவிற்கு நேரம் நமக்கு இருப்பதில்லை. எல்லாவற்றையும் மேலோட்டமாகப் பார்த்துவிட்டு மேலோட்டமாகப் போய் விடுகிறோம். அவ்வாறு போகக்கூடாது என்பதை வலியுறுத்துவதற்காகத்தான் இந்த தொடர் உங்களுகாக எழுதப்படுகிறது.
இனிமேல் இந்து மதத்தில் சொல்லப்படும் சடங்குகளை, சம்பிரதாயங்களைக் கூர்ந்து கவனியுங்கள். மேலோட்டமாகப் பார்க்காமல், தீவிரமாக அலசி ஆராயுங்கள். எனனைவிட சிறப்பாகவே பல காரணங்களைக் கண்டுபிடிப்பீர்கள் சமீபகாலமாக மலையைச் சுஹ்றி இறைவிநின் பெயரைச் சொல்லி கிரிவலம் வரும் வழக்கம் மக்களிடையே எழுந்துள்ளது. 1991_ம் ஆண்டிற்குப் பிறகுதான் திருவண்ணாமலையில் பௌர்ணமியன்று லட்சக்கணக்கான மக்கள் கிரிவலம் வரத்தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டிலுள்ள பல கோயில்களில், குறிப்பாக மலைமேல் அமைந்துள்ள கோயில்களிலும் கிரிவலம் வரும் வழக்கம் அதிகரித்துள்ளது. பாராட்டப்படவேண்டிய விஷயம்தானே. ஆனால் இந்த வழி பாட்டு முறையை கிண்டலடிக்கும் போக்கம் ஒரு சிலரிடத்தில் காணப்படுகிறது.
தொடரும்...
1 comment:
Your ranking has further improved. Now you are 2,66,627. Congratulations!
Post a Comment