Thursday, August 09, 2007

சிறுமியிடம் செக்ஸ் வன்முறை முதியவருக்கு தண்டனை குறைப்பாம்!

இதென்ன அசிங்கமாக இருக்கிறத?

முதியவர் என்றால், தண்டனை இன்னும் அதிகமாக அல்லவா கொடுக்கவேண்டும்?
சிறுவர்களை பாலுறவுபலாத்காரம் செய்வதற்கு தண்டனை மிகவும் அதிக பட்சமாக இருக்கவேண்டும்

சிறுமியிடம் செக்ஸ் வன்முறை முதியவருக்கு தண்டனை குறைப்பு

மதுரை :சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு முதுமையை கருத்தில் கொண்டு ஐகோர்ட் கிளை தண்டனை காலத்தை குறைத்து உத்தரவிட்டது.

திருநெல்வேலி, சிவந்திப்பட்டியில் 13 வயது சிறுமியை, குமார்(60), பாலியல் பலாத்காரம் செய்தார். போலீசார் வழக்குப் பதிந்து குற்றவாளியை கோர்ட்டில் நிறுத்தினர். 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யப்பட்டது. மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதி முருகேசன் விசாரித்து தீர்ப்பு வழங்கினார்.

தீர்ப்பு விவரம்: சிறுமி அப்பாவி. உடல்நலமின்றி இருந்துள்ளார். மருத்துவ சாட்சியத்தில் சில சந்தேகம் எழுந்தாலும் குற்றம் நிகழ்ந்தது தெரிகிறது. காலம் கடந்து புகார் கூறப்பட்டாலும் தாமத காரணம் ஏற்கக் கூடியது. தாமத புகாரால் மட்டுமே வழக்கை தள்ளுபடி செய்யமுடியாது. குமார் கொடூரமான குற்றம் செய்துள்ளார். கீழ்க்கோர்ட் வழங்கிய தீர்ப்பு சரியானதே. அவரின் வயதை கருத்தில் கொண்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனையை ஏழு ஆண்டுகளாக குறைக்கப்படுகிறது.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments: