Thursday, August 09, 2007

டாடா ஆலைக்கு மக்களிடம் ஆதரவு இல்லை பா.ஜ., தகவல்

மக்களிடம் ஆதரவு இல்லை பா.ஜ., தகவல்

துõத்துக்குடி : சாத்தான்குளம் பகுதியில் 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் முன்னாள் மத்திய அமைச்சரும், மாநில துணைத்தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் மாநில பொதுச்செயலர் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்ட 7 பேர் கொண்ட பா.ஜ., குழுவினர் நேற்று பொதுமக்களிடம் கருத்துக்கேட்டனர். பின்னர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது,"டாடா தொழிற்சாலைவேண்டும் என ஒருவர் கூட சொல்லவில்லை.

பொருளாதார ரீதியான, விவசாய ரீதியான, வேலைவாய்ப்பு ரீதியான நலன்கள் எதுவும் தேவையில்லை எனக்கூறிய மக்கள், தங்களுக்கு தங்கள் நிலம், தங்கள் ஊர் வேண்டும் என்றனர். விவசாயத்தின் மூலமாக நாங்கள் பிழைத்துக்கொள்வோம் என உறுதியாக தெரிவித்தனர். சென்னையில் வரும் 13ம் தேதி நடக்கவுள்ள பா.ஜ., கருத்தரங்கில் டாடா தொழிற்சாலை குறித்த எங்களின் நிலைப்பாடு முடிவு செய்யப்படும்.டாடா தொழிற்சாலையை துவங்கவேண்டுமென வலியுறுத்தி மத்திய உள்துறை இணை அமைச்சர் ராதிகா செல்வி தலைமையில் கல்லுõரி மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோரை திரட்டி நடத்தப்பட்ட பேரணி, மக்களை ஏமாற்றும் செயல். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments: