Wednesday, August 01, 2007

மதானி விடுதலை: எதிர்த்து அப்பீல்: பாஜக கோரிக்கை

ஆகஸ்ட் 01, 2007

டெல்லி: கோவை குண்டு வெடிப்பு வழக்கில் இருந்து கேரள ஜனநாயக மக்கள் கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு அப்பீல் செய்ய வேண்டும் என பாஜக கோரியுள்ளது.

அக் கட்சியின் செய்தித் தொடர்பாளரான ரவிசங்கர் பிரசாத் கூறுகையில்,

குண்டு வெடிப்பு வழக்கில் இருந்து மதானி விடுவிக்கப்பட்டது அதிர்ச்சி தருகிறது. அவருக்கு உரிய தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும்.

அவரது விடுதலையை எதிர்த்து தமிழக அரசு முறைப்படு மேல் முறையீடு செய்ய வேண்டும் என்றார்

No comments: