அலி அப்துல்லாவின் நாசவேலை விïகம் : ஆகஸ்டு 1-ந் தேதி சென்னையில் குண்டு வெடிப்புக்கு திட்டம்?-தீவிரவாதிகள் சதி திட்டம் அம்பலம்
சென்னை, ஜுலை. 29-
தமிழ்நாட்டில் மாபெரும் நாசவேலைக்கு திட்ட மிட்ட சதிகார கும்பல் ஒன்று சேர்ந்தது? எங்கெங்கு குண்டு வைக்க திட்டமிட்டனர்? என்ற முழு விவரம் தெரிய வந்துள்ளது.
தற்போதைய சதிகார கும்பலுக்கு தலைவனாக இருப்பவன் அலி அப்துல்லா. இவன் லேசுபட்ட ஆள் இல்லை. 1997-98களில் சென்னை, திருச்சி, மதுரை, ஈரோடு என்று பல ஊர் களில் குண்டுகளை வெடிக்க வைத்தவன்.
சென்னை பல்லாவரம் பாரதி தெருவில் வசித்து வந்த இவன் இஸ்லாமிய பாதுகாப்பு படை மற்றும் ஜிகாத் கமிட்டியில் தீவிர உறுப்பினர். 1997-ம் ஆண்டு பாகிஸ்தான் சென்று ஆயுதப்பயிற்சி பெற்று வந்த இவன் 1998-ல் கைதாகி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டான்.
சில மாதங்களில் விடுத லையான அவன் 2003ல் மீண்டும் கைதாகி புழல் ஜெயிலில் உள்ளான். தீவிர வாத சிந்தனையில் வெறி பிடித்தவன் போல இவன் நாட்களை நகர்த்தி வந்தான்.
கோவை தொடர் குண்டு வெடிப்பு போன்று சென்னை மற்றும் தமிழக ரெயில்களில் தொடர் குண்டு வெடிப்புகள் நடத்தி மீண்டும் தமிழ்நாட்டு மக்களை கதிகலங்க வைக்க வேண்டும் என்பதே இவனது குரூர சிந்தனையாக இருந்தது. தனது வெடிகுண்டு வெறிக்கு ஒரு நல்ல வாய்ப்பு எப்போது வரும் என்று அவன் வாய்ப்புக்காக காத்து இருந்தான்.
கடந்த ஆண்டு அவனுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.
2007 ஜனவரி மாதம் நெல்லை மேலப் பாளை யத்தை சேர்ந்த ஹீரா என்ற செய்யது காசிம் ஒரு வழக்கு தொடர்பாக கைதாகி புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டான். ஜெயி லுக்குள் அலி அப்துல்லா வும், ஹீராவும் சந்தித்துக் கொண்டனர்.
ஹீரா மேலப் பாளையத் தில் இயங்கும் "ராயல் குரூப்'' எனும் இயக்கத்தில் தீவிர உறுப்பினர். ராயல் குரூப் என்பது, வழி தவறி செல்லும் முஸ்லிம் பெண்களை ஈவு இரக்கம் இல்லாமல் கொலை செய்யும் அமைப்பாகும்.
ஹீராவின் பின்னணியை அறிந்த அலி அப்துல்லா, தொடர் வெடி குண்டை அவன் மூலம் நிகழ்த்தி விட லாம் என்ற முடிவுக்கு வந்தான். கொஞ்சம், கொஞ்சமாக ஹீராவிடம் பேசி, தமிழ் நாட்டில் ரெயில்களில் குண்டு வைக்க வேண்டும் என்றான்.
அவனது சதி திட்டத்துக்கு உதவிகள் செய்ய ஹீரா ஒத்துக் கொண்டான். இதையடுத்து சென்னை, கோவை, மதுரை, நெல்லை ஆகிய நகரங்களிலும் ஓடும் ரெயில்களிலும் 11 இடங் களில் குண்டு வைக்க சதி திட்டம் தீட்டப்பட்டது.
ஒரு சிலரால் இந்த சதி திட்டங்களை நிறைவேற்ற இயலாது என்பதை உணர்ந்த அலிஅப்துல்லா, ஒத்த கருத் துடைய சுமார் 20 இளை ஞர்களை திரட்டும் படி ஹீராவுக்கு உத்தர விட்டான்.
புழல் சிறையில் இருந்து வெளியில் வந்த ஹீரா, ஆட்களைத் திரட்டும் பணியை முதலில் தொடங் கினான். அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் சிலர் ஹீரா வின் வார்த்தைகளில் மயங்கி சதி திட்டத்துக்கு உடன் பட்டனர்.
அப்படி உடன் பட்ட வர்களில் ஒருவன் தான் ஷேக் அப்துல்கபூர். நெல்லை பேட்டையைச் சேர்ந்த அப்துல்கபூருக்கு திருமண மாகி விட்டது. 2 மகன்கள் உள்ளனர்.
வேலை தேடி சென்னை வந்த அப்துல்கபூருக்கு தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள ஒரு செருப்பு கடையில் வேலை கிடைத்தது. சாதாரண ஊழியராக இருந்த அவன் நாளடைவில் மானேஜர் அந்தஸ்துக்கு உயர்ந்தான்.
மனைவி மற்றும் மகன் களை அவன் ஆலந்தூ ரில் ஒரு வீட்டில் குடி வைத்தி ருந்தான். 5 நேர தொழுகை உள்ளிட்ட இஸ்லாமிய கோட் பாடுகளில் தீவிரமாக இருந்த அவனை சுமார் 6 மாதத்துக்கு முன்பு ஆலந்தூர் மசூதியில் வைத்து ஹீரா சந்தித்தான்.
அப்துல்கபூரிடம், ஹீரா நீண்ட நேரம் பேசினான். மெல்ல, மெல்ல கபூர் மனதை தீவிரவாத பாதைக்கு மாற் றினான்.
4 மாதங்களுக்கு முன்பு அப்துல்கபூரை ரகசிய இடத்துக்கு அழைத்து சென்று, ரெயில்களில் குண்டு வெடிப்புக்கு திட்ட மிட்டுள்ள தகவலை ஹீரா தெரிவித்தான். இதற்காக டைமர் கருவிகளை தயாரித்து தரும்படி ஹீரா கேட்டுக் கொண்டான்.
அப்துல்கபூர் இதற்கு சம்மதித்தான். இதையடுத்து அப்துல்கபூரின் செல் போன் நம்பரை புழல் சிறைக்குள் இருக்கும் அலி அப்துல்லாவிடம் ஹீரா கொடுத்தான்.
அதன் பிறகு அப்துல் கபூரிடம், அலிஅப்துல்லா போனில் தொடர்பு கொண்டு பேசினான். குண்டு வெடிப்புக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை செல்போன் மூலமாக அலி அப்துல்லா விளக்கமான கூறினான்.
அப்துல்கபூரும், அலிஅப் துல்லாவும் ஒரு தடவை கூட நேரில் சந்தித்தது இல்லை. செல்போன் மூலம் தான் பேசிக் கொள்வார்கள். அடிக்கடி அவர்கள் குண்டு வெடிப்பு பற்றி விவாதித்தனர்.
இதற்காக புழல் ஜெயிலுக் குள் தனி சிம்கார்டு ஒன்றை அலி அப்துல்லா பயன்படுத்தி வந்தான். அலிஅப்துல்லா செல்போனில் பேசி யாருக்கும் தெரியாமல் மிக, மிக ரகசியமாக சதி திட்டம் தீட்டி வருவதை முதன் முதலில் சிறைத் துறை போலீசாÖர் தான் கண்டு பிடித்தனர்.
சிறைக்குள் இருக்கும் அவனுக்கு செல்போன், சிம்கார்டு போன்றவை எப் படி கிடைத்தன என்பது இன்று வரை மர்மமாக உள்ளது.
அலிஅப்துல்லாவை அவன் போக்கில் விட்டுப் பிடித்த போலீசார் இது பற்றி உளவுத்துறைக்கு தக வல் கொடுத்தனர். இதன் தொடர்ச்சியாக அலி அப் துல்லா யார்-யாரிடம் செல் போனில் பேசுகிறான் என் பதை உளவுத்துறை யினர் கண்காணித்தனர்.
அப்போது ஹீரா, அப் துல்கபூர் இருவரிடமும் அலிஅப்துல்லா தினமும் பேசுவதை கண்டு பிடிக்கப் பட்டது. இதையடுத்து ஹீரா, அப் துல் கபூர் இருவரையும் உளவுத்துறை பின் தொடர்ந்து கண்காணித்தப்படி இருந்தது.
இந்த நிலையில் கடந்த மே மாதம் 15-ந் தேதி ஹீரா, மண்ணடி அப்துல்காதர், பழனி உமர் ஆகிய மூவரும் மண்ணடியில் கைது செய்யப்பட்டனர். இந்து மத தலை வர்களை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக அவர்கள் பிடிபட்டனர்.
புழல் ஜெயிலில் அடைக்கப்பட்ட அவர்கள் தங்களது குண்டு வெடிப்பு தாக்கு தல்கள் குறித்து அலி அப்துல்லாவுடன் விவாதித்தனர். அப் போது அலிஅப்துல்லா நாச வேலை செயல்களுக்கு இறுதி வடிவம் கொடுத்தான்.
அப்துல் கபூரிடம் டைமர் கருவிகளை தயா ரிக்க உத்தரவிட்டான். அதை ஏற்று அப்துல்கபூர் மூலப் பொருட் களை வாங்கினான்.
இதற்கிடையே மதுரை முஸ்தபா உள்ளிட்ட சிலர் மூலம் வெடி பொருள்களை சேகரித்தான். அதில் ஒரு பகுதி தான் மதுரை அருகே புதைக்கப்பட்டதாகும்.
இந்த நிலையில் கடந்த வாரம் ஹீரா, அப்துல்காதர் இருவரும் ஜாமீனில் விடு தலை செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து குண்டு வைக்கும் தனது திட்டத்தை நிறைவேற்றும் இறுதி கட்ட பணியில் அலி அப்துல்லா ஈடுபட்டான்.
அப்துல்கபூரை டைமர் கருவிகள் செய்து 29-ந் தேதி சென்னை எடுத்து வருமாறு உத்தரவிட்டான். ஏற்கனவே அப்துல்கபூர் தன் உறவினர் வீட்டு திருமணத்துக்கு போவ தாக கூறி விட்டு கடந்த 12-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை பேட்டையில் உள்ள தன் வீட்டில் இருந்து 2 டைமர் கருவிகளை ஓரளவு உரு வாக்கி இருந்தான்.
டைமர் கருவியை முழு மையாக்குவதற்காக கடந்த சனிக்கிழமை மீண்டும் பேட் டைக்கு சென்றான். இந்த நிலையில் தான் கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் பெங்களூர், அகமதாபாத்தில் தொடர் குண்டு வெடிப்புகள் நடந்தன. தமிழ்நாட்டில் போலீசார் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொண்ட போது தான் உளவுத்துறைக்கு அலி அப் துல்லாவின் ரகசிய பேச்சுகள் பற்றி `பொறி' தட்டியது.
உடனடியாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. உள வுத்துறை அதிகாரிகள் கொடுத்த தகவல்களின் பேரில் சனிக்கிழமை (26-ந் தேதி) இரவு முதன் முதலில் போலீசார் ஹீராவை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
அப்போது அவன் அலி அப்துல்லா வகுத்து கொடுத்துள்ள சதி திட்டங் கள் பற்றி தகவல்களை வெளியிட்டான். அதோடு குண்டுகளை குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்க செய்யும் டைமர் கருவிகளை பேட் டையில் உள்ள ஒரு வீட்டில் அப்துல்கபூர் செய்து வரும் பயன் உள்ள தகவலலையும் கூறினான்.
மறு நாள் (ஞாயிறு 27-ந் தேதி) இரவு நெல்லை தனிப்படை போலீ சார் பொறி வைத்து அப்துல் கபூரை பிடித்தனர். இவன் மூலம் போலீசாருக்கு எல்லா தகவல்களும் ஓரளவு கிடைத் துள்ளது.
நாசவேலைக்கான ஏற் பாடுகள், இடங்கள் பற்றி அலி அப்துல்லாவும், ஹீரா வும் இதுவரை வாயைத் திறக்கவில்லை. ஆனால் அள்ள, அள்ள குறையாத அமுதசுரபி போல 90 சதவீத தகவல்களை அப்துல்கபூர் போலீசாரிடம் கொட்டி விட்டான்.
இதன் தொடர்ச்சியாகத் தான் நேற்று (28-ந் தேதி) சென்னையில் 2 பேரும் நெல்லையில் 2 பேரும், மதுரையில் ஒருவரும் பிடி பட்டனர். மதுரையில் 1 கிலோ வெடி பொருளும் கைப்பற்றப்பட்டது.
அலிஅப்துல்லா உத்தர வுப்படி அப்துல்கபூர் மற்றும் தீவிரவாதிகள் அனைவரும் நேற்று புறப்பட்டு இன்று (29-ந் தேதி செவ்வாய்க்கிழமை) சென்னை வந்து சேர திட்ட மிட்டிருந்தனர். நாளை (புதன்கிழமை 30-ந் தேதி) சென்னையில் ரக சிய இடத்தில் அவர்கள் அனைவரும் ஒன்று கூடி குண்டு வெடிப்பு திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுக்க திட்டமிட்டிருந்தனர்.
நாளை மறுநாள் (வியா ழன்) நோட்டம் பார்த்து விட்டு வெள்ளிக்கிழமை (ஆகஸ்டு 1-ந் தேதி) குண்டு வெடிப்புகளை அவர்கள் நிகழ்த்த முடிவு செய்திருந்ததாக தெரி கிறது. தீவிரவாதிகள் இதற் காகவே ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்து வைத்திருந்தது இதை உறுதிப்படுத்துவதற்காக போலீசார் தெரிவித்தனர்.
எப்படியோ அதிர்ஷ்ட வசமாக மிகப் பெரிய நாச வேலையில் இருந்து தமிழ் நாட்டு மக்கள் தப்பி உள்ளனர்.
தீவிரவாதிகளை சரி யான நேரத்தில் பிடிக்க உதவிய புழல் சிறைத்துறை பணியா ளர்கள், அதிகாரிகள், உள வுத்துறை அதிகாரிகள், நெல்லை தனிப்படை போலீசார், சென்னை போலீசார் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். தீவிர வாதிகளின் திட்டங் களை தவிடு பொடியாக்கிய தமிழக போலீஸ் மீண்டும் தன் திறமையால் தலை நிமிர்ந்து நிற்கிறது.
2 comments:
sanhay tekle
Hi!!! ezhila.blogspot.com is one of the most excellent informational websites of its kind. I take advantage of reading it every day. Keep it that way.
Post a Comment