இதுவரை நடந்த குண்டு வெடிப்புகள்
பெங்களூரில் நேற்று பகலில் 7 வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்த சம்பவம் நாட்டையே மீண் டும் ஒருமுறை அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளது.
இந்தியாவில் இது போன்ற வெடிகுண்டு சம்பவங்களில் ஏராளமா னோர் உயிரை பறிகொடுத் துள்ளனர்.
கடந்த 2003-ம் ஆண்டில் மும்பை ரெயிலில் வெடி குண்டு வெடித்து சிதறியதில் 11 பேர் பலியானார்கள்.
அதே ஆண்டு ஆகஸ்டு 25-ந்தேதி மும்பையில் காரில் வெடி குண்டு வெடித்ததில் 60 பேர் பரிதாபமாக உயிரிழந் தனர்.
2004-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி குண்டு வெடித்ததில் குழந்தைகள் உள்பட 14 பேர் தங்க ளுடைய இன்னுயிரை பறிகொடுத்தனர்.
2005-ம் ஆண்டு அக்டோபர் 29-ந்தேதி புதுடெல்லியில் 3 இடங் களில் குண்டு வெடித்ததில் 66 பேர் பலியானார்கள்.
2006-ம் ஆண்டு மார்ச் 7-ந்தேதி வாரணாசியில் 15 பேர் உயிரிழந்தனர். 60 பேர் படுகாயம் அடைந்தனர்.
2006-ம் ஆண்டு ஜுலை 11-ந்தேதி மும்பையில் ரெயில் நிலையங்களில் வெடிகுண்டு அடுத்தடுத்து வெடித்ததில் 180 பேர் ரத்த வெள்ளத்தில் உயிரை பறிகொடுத்தனர்.
அதே ஆண்டு செப்டம்பர் 8-ந்தேதி மும்பை மலேகான் பகுதியில் மசூதி அருகே குண்டு வெடித்ததில் 32 பேர் உயிரிழக்க நேரிட் டது.
2007-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் சென்ற ரெயிலில் குண்டு வெடித்து 66 பயணிகள் பரிதாபமாக பலியானார்கள்.
அதே ஆண்டு மே 18-ந்தேதி ஹைதரபாத்தில் வெள்ளிக்கிழமை தொழு கையின்போது குண்டு வெடித்ததில் 11 பேர் உயிரிழந்தனர்.
அதே ஆண்டில் ஆகஸ்டு 25-ந்தேதி ஹைதராபாத் பூங்காவில் வெடிகுண்டு வெடித்து 40 பேர் பலியான சோக சம்பவம் நிகழ்ந்தது.
கடந்த மே மாதம் 13-ந்தேதி ஜெய்ப்பூரில் சக்தி வாய்ந்த 7 வெடிகுண்டுகள் வெடித்து சிதறின.இதில் 63 பேர் பலியானார்கள்.
கடந்த ஜுலை 25-ந்தேதி பெங்களூரில் வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர்.
தற்போது மீண்டும் வெடிகுண்டு சம்பவம் அரங்கேறியுள்ளது.
No comments:
Post a Comment