குண்டுவெடிப்பு: பிரதமர் விலக வேண்டும்-பிருந்தா
செவ்வாய்க்கிழமை, ஜூலை 29, 2008   
 இலவச நியூஸ் லெட்டர் பெற   
      
ஹைதராபாத்:  பெங்களூர், அகமதாபாத் குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்குப் பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஹைதராபாத்தில் நடந்த இந்திய - அமெரிக்க அணு ஒப்பந்த எதிர்ப்பு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிருந்தா காரத் பேசுகையில், நாட்டில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறி விட்டது.
பெருகி வரும் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தத் தவறிய மத்திய அரசு அதற்குப் பொறுப்பேற்க வேண்டும். பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக பதவி விலக வேண்டும்.
அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தம் மேற்கு ஆசிய நாடுகளுடனான நமது நாட்டின் உறவை சீர்கெடுத்து விடும். நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அகில இந்திய மஜ்லிஸ் இ இத்தாஹுதுல் முஸ்லிமீன் கட்சி, அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது எண்ணற்ற முஸ்லீம்களின் மனதை காயப்படுத்தியுள்ளது என்றார் அவர்.
 
No comments:
Post a Comment