மகாத்மா நினைவு இடத்தில் மதமாற்றப் பிரச்சாரம் சென்னை அடையாறு பகுதியில் அமைந்துள்ள மகாத்மா காந்தி மண்டபம், கிறிஸ்தவர்கள் மதப் பிரச்சாரம் செய்ய வாடகைக்கு விடப்படுவது கண்டிக்கத்தக்கது.
கடந்த மார்ச் 21ஆம் தேதி ஏசு சிலுவையில் அறையப்பட்ட நாளைக் காந்தி மண்டபத்தில் வைத்து கிறிஸ்தவ மதப்பிரச்சாரம் செய்ய பிரச்சாரம் செய்யப்பட்டது கண்டு இந்து முன்னணி மாநிலச் செயலாளர் சி.பரமேஸ்வரன் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்திருந்தார்.
காந்திஜி தனது வாழ்நாள் முழுவதும் கிறிஸ்தவ மதப்பிரச்சாரத்திற்கு எதிரான கருத்து கொண்டிருந்தவர். மகாத்மாவைக் கிறிஸ்தவராக மாற்ற நடந்த தகிடுதத்தங்களை அவரது வாழ்க்கை சரிதமான சத்திய சோதனை நூலில் விரிவாக விளக்கி எழுதியுள்ளார்.
மகாத்மா காந்திஜி தான் பிரதமராக பதவியேற்றால் முதன்முதலில் கையெழுத்திடும் அரசு ஆணை மதமாற்றத் தடைச்சட்டமாகத்தான் இருக்கும் என உறுதிபடத் தெரிவித்தவர்.
மகாத்மாவின் கொள்கைகளுக்கு எதிராக மதப்பிரச்சாரம் செய்ய காந்திஜி நினைவு மண்டபத்தைக் கொடுத்தது அவரது ஆன்மாவிற்குச் செய்யும் துரோகம்.
இந்நினைவு மண்டபம் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தும் இப்படிப்பட்ட நடவடிக்கை எடுத்ததற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும்.
கிறிஸ்தவ மதப்பிரச்சாரத்தைக் கண்டித்து காந்திஜி நினைவு மண்டபம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக இந்துமுன்னணி அறிவித்தது. இதற்கு காவல்துறை உயர் அதிகாரிகள் இந்த முறை விட்டுவிடுங்கள், இனி இந்த இடத்தில் மதப்பிரச்சாரத்திற்கு அனுமதி அளிக்காமல் பார்த்துக் கொள்கிறோம் என்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தப் பிரச்னையை மக்கள் முன் கொண்டு செல்ல இந்து முன்னணி மாநிலச் செயலாளர் சி.பரமேஸ்வரன் தலைமையில் மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கைதானார்கள்.
அமைதியான முறையில் நடைபெற்ற அறப்போராட்டத்தைத் தமிழக அரசு புரிந்துகொண்டு மகாத்மாவின் கொள்கையை மதித்து வருங்காலத்தில் கிறிஸ்தவ மதப்பிரச்சாரத்திற்குக் காந்தி மண்டபத்தை அளித்திடக் கூடாது என இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது.போராட்டம் போராட்டம்...
ஆலயச் சொத்தை மீட்க ஓர் அறப்போராட்டம்
ஈரோடு மந்தைவெளி மாரியம்மன் என்கிற ஸ்ரீ பெரியமாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 40 ஏக்கர் நிலத்தை சி.எஸ்.ஐ. சர்ச் நிர்வாகம் அபகரித்துள்ளதைக் கண்டித்து இந்து முன்னணி சார்பில் பொங்கல் வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1931ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள அரசு சர்வே படி பெரிய மாரியம்மன் ஆலயத்திற்கு 750 அடி தொலைவில் பிடாரி அம்மன் என்ற பட்டத்து அம்மன் கோவில் இருந்ததாக காட்டப்பட்டுள்ளது.
இதன் பின்னர் சி.எஸ்.ஐ. என்ற கிறிஸ்தவ அமைப்பால் அப்புறப்படுத்தப்பட்ட பிடாரி அம்மன் சிலை தற்போது மாரியம்மன் கோயில் நிர்வாக அலுவலகம் முன்பு வைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது.
40 ஏக்கர் நிலப்பரப்பில் 12.66 ஏக்கர் ஆவணங்கள் இருப்பதாக மாவட்ட ஆட்சியாளரிடம் 1998இல் சி.எஸ்.ஐ. நிர்வாகம் தகவல் அளித்தது.
தற்போது 14.46 ஏக்கர் ஆவணம் உள்ளதாக அறிக்கை விடுத்துள்ளனர். (காலைக்கதிர் 25308).
தமிழக அரசு சி.எஸ்.ஐ. நிர்வாகத்தின் சொத்து ஆவணங்களைச் சரிபார்த்து ஆக்கிரமிக்கப்பட்ட ஆலய நிலங்களை மீட்டு கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்து முன்னணி கோருகிறது.
ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாநிலத் துணைத் தலைவர் பூசப்பன், மாநிலச் செயலர் சண்முகசுந்தரம், கேசவபெருமாள் மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
ஆலயச் சொத்தை மீட்க தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் காலதாமதம் இன்றி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
http://hindumunnani.org/pasuthai11.asp
No comments:
Post a Comment