மாயாவதி பிரதமராக தெலுங்கு தேசம் ஆதரவு
வெள்ளிக்கிழமை, ஜூலை 18, 2008
ஹைதராபாத்: மாயாவதி பிரதமராவதற்கு தெலுங்கு தேசம் ஆதரவு தரும் என அக்கட்சி அறிவித்துள்ளது.
மாயாவதியை பிரதமர் பதவிக்கு கொண்டு வர வேண்டும் என தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் கூறியிருந்தார்.
இதை தெலுங்குதேசம் ஆதரித்துள்ளது. இதுகுறித்து தெலுங்கு தேசம் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் எர்ரான் நாயுடு கூறுகையில், மாயாவதி பிரதமர் பதவிக்கு வருவதை தெலுங்குதேசம் ஒருபோதும் எதிர்க்காது. அவர் அப்பதவிக்கு முற்றிலும் தகுதியானவர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராகவும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு எதிராகவும், 3 வது அணி வலுவுடனும், ஒற்றுமையுடனும் இருந்தால், செயல்பட்டால், தேர்தலை சந்தித்தால் இது சாத்தியமானதுதான்.
இதுதொடர்பாக அனைவரும் அமர்ந்து பேசினால் மாயாவதி பிரதமர் பதவிக்கு நிறுத்தப்படுவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது என்றார் நாயுடு.
இதன்மூலம் ஆந்திராவில் தங்களது கட்சிக்கு ஆப்பு வைத்து வரும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியை மாயாவதியிடம் இருந்து பிரிக்க தெலுங்கு தேசம் முயற்சித்துள்ளது.
No comments:
Post a Comment