Wednesday, July 30, 2008

ஜட்டிக்குள் மறைத்து செல்போன் கொண்டு வந்த அலி அப்துல்லா

ஜட்டிக்குள் மறைத்து செல்போன் கொண்டு வந்த அலி அப்துல்லா
புதன்கிழமை, ஜூலை 30, 2008



சென்னை: விசாரணைக்கு நீதிமன்றம் சென்று திரும்பும்போது, அலி அப்துல்லா தனது கூட்டாளிகளிடம் இருந்து செல்போன் மற்றும் சிம்கார்டுகளை பெற்றதும் அவற்றை ஜட்டிக்குள் மறைத்து வைத்து சிறைக்குள் எடுத்துச் சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை புழல் சிறையில் இருந்தபடியே சதித்திட்டம் தீட்டி கூட்டாளிகளுக்கு ரகசிய உத்தரவுகளை வழங்கிக் கொண்டிருந்த அலி அப்துல்லாவின் அறையை சிறை அதிகாரிகள் சில தினங்களுக்கு முன் சோதனை செய்தனர்.

அப்போது சிம்கார்டுகளை வைத்திருந்த அலி அப்துல்லா அதை கடித்து கழிவறையில் துப்பினார். போலீசார் போராடி உடைந்த சிம்கார்டுகளை எடுத்து சோதித்து வருகின்றனர். மேலும் புழல் சிறை முழுவதையும் போலீசார் சோதனை செய்தனர். ஆனால் எதுவும் சிக்கவில்லை.

இதையடுத்து அலி அப்துல்லாவிடம் செல்போனும் சிம்கார்டும் எப்படி வந்தது என்று சிறைத்துறை அதிகாரிகள் விசாரிணை நடத்தினர்.

விசாரணையில் கடந்த 20ம் தேதி நீதிமன்ற விசாரணைக்கு அலி அப்துல்லா கொண்டு செல்லப்பட்டார். அப்போது கழிவறைக்கு சென்ற அலி அப்துல்லா, கழிவறைக்கு வெளியில் இருந்த கூட்டாளிகள் மூலம் செல்போன் மற்றும் சிம்கார்டுகளை பெற்றுள்ளார். அதை ஜட்டிக்குள் வைத்து சிறைக்கு கொண்டு வந்தது தெரியவந்துள்ளது.

நீதிமன்றத்துக்கு சென்று வந்ததில் இருந்து அலி அப்துல்லாவின் செயலில் மாற்றத்தை கண்டுபிடித்த போலீசார் அவரை கண்காணித்துள்ளனர். இரவில் யாருடனோ பேசுவதை போலீசார் ரகசியமாக கண்டறிந்தனர்.

அறைக்குள் சென்று பார்த்தபோது செல்போன் எதுவும் தென்படவில்லை. போலீசார் தொடர்ந்து கண்காணித்ததில் செல்போனில் பேசிவிட்டு, உடனே அதை ஜட்டிக்குள் மறைத்து வைத்துவிடுவதை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து கடந்த 23ம் தேதி நள்ளிரவு அதிரடி சோதனை செய்தபோது அலி அப்துல்லா சிக்கிக் கொண்டார். ஆனால் அதற்குள் சிம்கார்டுகளை எடுத்து கடித்து துப்பிவிட்டார்.

பறிமுதல் செய்யப்பட்ட உடைந்த சிம்கார்டு ஒன்றில் கடைசியாக தொடர்பு கொண்ட எண்ணை பரிசோதித்தபோது அது நெல்லையில் கைது செய்யப்பட்ட அப்துல் கபூருடன் பேசியது என்பது தெரியவந்தது. அப்துல் கபூரிடம் நடத்திய விசாரணையில் அது உறுதியானது.

அப்போதுதான் சென்னை மற்றும் நெல்லையில் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டது தெரியவந்தது.

அலி அப்துல்லாவுடன் இருந்த ராஜா உசேன், ஜிகாத் கமிட்டி என்ற தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த குணங்குடி ஹனிபா, ஏர்வாடி காசிம் ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சென்னை மண்ணடியில் தப்பிய தீவிரவாதி தவுபீக்தான், அலி அப்துல்லாவுக்கு செல்போன் கொடுத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். தவுபூக் தனியாக இருந்து கொண்டே திட்டம் குறித்த ரகசிய உத்தரவுகளை பிறப்பித்து வருவதாகவும் போலீசார் கூறுகின்றனர்.

இதையடுத்து தவுபீக்கை பிடிப்பதற்கான தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சிறையில் உள்ள அலி அப்துல்லா மற்றும் அபுதாகீர் ஆகியோரை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வடக்கு கடற்கரை போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தும் விசாரணையில் தவுபீக்கின் இருப்பிடம் தெரிய வரும் என்று போலீசார் கருதுகின்றனர்.

புதிய வழக்கில் அலி அப்துல்லா கைது:

இந் நிலையில் சென்னை மற்றும் நெல்லையில் குண்டுவெடிப்புக்கு திட்டம் தீட்டிய தீவிரவாத தலைவர் அலி அப்துல்லாவை போலீஸார், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க சதித் திட்டம் தீட்டியதாக புதிய வழக்கில் இன்று கைது செய்துள்ளனர்.

நெல்லை பேட்டை போலீஸார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

இது தொடர்பாக பேட்டையிலிருந்து வந்த போலீஸ் படை, புழல் மத்திய சிறைக்குச் சென்று அலி அப்துல்லாவை சந்தித்தது. பின்னர் அவரைக் கைது செய்வதற்கான உத்தரவை அவர்கள் அப்துல்லாவிடம் காட்டினர்.

மேலும், அப்துல்லாவை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி நெல்லை கோர்ட்டில் நெல்லை போலீஸார் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதேபோல, அலி அப்துல்லா மற்றும் அபுதாகீர் ஆகியோரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை வடக்கு கடற்கரை போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

2 comments:

கால்கரி சிவா said...

இவர்களெல்லாம் முகமதியர்களே அல்ல அனைவரும் இந்துத்வாதிகள் என நம் இணைய இஸ்லாமிஸ்ட்கள் தக்கியா செய்வார்கள்.

எல்லாம் வல்ல ஏக இறைவன் இவர்களை சீக்கிரம் சுவனத்திற்கு அழைத்துக் கொண்டால் நல்லது அல்லது நாமவது அவர்களை எல்லாம் வல்ல ஏக இறைவனிடம் கூடிய சீக்கிரம் ஒப்படைக்க வேண்டும்

எழில் said...

கருத்துக்கு நன்றி சிவா