Wednesday, July 30, 2008

திண்டுக்கல்: இந்துக்கள்-கிருஸ்தவர்கள் மோதல், மதக் கலவர அபாயம்

திண்டுக்கல்: இந்துக்கள்-கிருஸ்தவர்கள் மோதல், மதக் கலவர அபாயம்
புதன்கிழமை, ஜூலை 30, 2008


திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே அந்தோணியார் திருவிழா தொடர்பாக இந்துக்கள், கிருஸ்துவர்கள் இடையே மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே உள்ளது பெருமாள் கோவில் பட்டி. இங்கு அந்தோணியார் ஆலய சப்பர திருவிழா நடைபெறும். அப்போது தேர் பவனி ஊரை சுற்றி வரும்.

இந்த நிலையில் அந்த சப்பரம், காளியம்மன் கோவில் அருகே வரக் கூடாது என்று ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நிலமைமையை உணர்ந்த மாவட்ட கலெக்டர் வாசுகி சப்பரம் செல்ல வேண்டிய பாதையை அளந்து நிர்ணயம் செய்தார். பின்பு இரு தரப்பினர் இடையே பேச்சுவார்ததை நடத்தினர். இதில் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை.

இந்த நிலையில் தேர் பவனி துவங்கியது. இதனால் ஆவேசம் அடைந்த ஒரு தரப்பை சேர்ந்த சுமார் 250 பேர் ஊரைவிட்டு காலி செய்தனர்.

அவர்கள் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் தங்களது குடும்பத்தோடு தங்கியுள்ளனர்.

இந்த நிலையில் திண்டுக்கல் தாசில்தார் தெய்வேந்தின் இரு தரப்பு மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினரார். ஆனால் அதிலும் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை.

அப்போது, ஒரு தரப்பினர், காளியம்மன் கோவிலுக்கு சுற்றுசுவர் கட்டித்தர வேண்டும், இரண்டு நாடக மேடைகளில் ஒன்றை தங்களுக்கு ஒதுக்க வேண்டும், என தாசில்தாரிடம் வலியுறுத்தினர்.

தங்களது கோரிக்கைகளை அரசு ஏற்காத பட்சத்தில் தங்களது ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.

இதனால் பெருமாள்கோவில்பட்டியில் பாதுகாப்பு கருதி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் பதட்டமான நிலையில் அந்த கிராமம் உள்ளது.

No comments: