Monday, July 28, 2008

கேரளாவுக்கு வெடிகுண்டு எச்சரிக்கை!!

கேரளாவுக்கு வெடிகுண்டு எச்சரிக்கை!!

பெங்களூரு: பெங்களூரு, அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களை நிகழ்த்திய தீவிரவாதிகளின் அடுத்த குறி கேரளாவாக இருக்கக் கூடும் என கர்நாடக டிஜிபி ஸ்ரீகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னப்பட்னா குண்டு வெடிப்பைக் கண்டுபிடித்த பிறகு தனக்கு ஒரு மர்ம நபர் போன் செய்ததாகவும், அதில் பெங்களூரு குண்டு வெடிப்புக்குப் பிறகு தங்களின் குறி கேரளாதான் எனத் தெரிவித்தாகவும் கூறியுள்ளார்.

போன் வந்த நம்பரை தங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், இதனால் தன்னிடம் இத் தகவலைக் கூறியவர் யார் என்பதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து கேரளா மற்றும் தமிழக போலீசாருக்கு எச்சரிக்கைக் குறிப்புகளை தான் அனுப்பியுள்ளதாகவும் ஸ்ரீகுமார் தெரிவித்தார்.

சென்னப்பட்னாவில் வியாழனன்று வெடித்த குண்டுகள்!!

பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு வியாழக்கிழமையன்றே சென்னப்பட்னாவில் நன்கு ஒத்திகை பார்க்கப்பட்டுள்ள அதிர்ச்சி விவரம் இன்றுதான் தெரிய வந்துள்ளது.

பெங்களூருலிருந்து 70 கிமீ தொலைவில் உள்ள சென்னப்பட்னா என்ற நகரில் வியாழக்கிழமை மாலையிலேயே குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இப்பகுதிகளில் கிணறுகளுக்கு வெடி வைப்பது முக்கியத் தொழில் என்பதால் போலீசார் கண்டு கொள்ளாமல் விட்டிருக்கின்றனர்.

பெங்களூர் குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட அமோனியம் நைட்ரேட் மற்றும் ஜெலட்டின் குச்சிகளை சென்னப்பட்னாவிலிருந்து கொண்டு சென்றிருக்கக் கூடும் என்று போலீசாருக்கு சந்தேகம் இருந்தது. எனவே இன்று மாலை சென்னப்பட்னா முழுவதிலும் சோதனை நடத்தப்பட்டது.

இந்தச் சோதனையின் போதுதான், சென்னப்பட்னாவுக்கு வெளியில் இரு குண்டுகள் வெடித்திருப்பதைக் கண்டுபிடித்தனர் போலீசார். பெங்களூரு குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் மற்றும் ஜெலட்டின் குச்சிகளைப் போன்ற வெடிப்பொருட்கள்தான் இங்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து தீவிரவாதிகள் சென்னப்பட்னாவில் பதுங்கியிருந்து பெங்களூரு ஆபரேஷனை நடத்தியிருப்பது தெளிவாகியுள்ளாத கர்நாடக டிஜிபி தெரிவித்துள்ளார்.

கர்நாடக போலீசார் சென்னப்பட்னா மற்றும் ஹாசன் பகுதிகளில் இப்போது தோடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

No comments: