இந்து முன்னணியின் வெற்றிச்செய்திகள்..
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் முனியப்பஸ்வாமி கோயில் கும்பாபிஷேக விழாவில் இந்து முன்னணி தொண்டர்கள் செய்த சிறப்பான சேவை மூலம் அனைத்துத் தரப்பு மக்களின் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளனர். முதலில் எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க.வினர் இந்து முன்னணியினரின் தன்னலமற்ற சேவையைப் பார்த்து தங்களின் நிலையை மாற்றிக் கொண்டு பாராட்டினார்கள்.
இல. வெங்கட்
சென்னை பெரம்பூர் பகுதி நரமுகவிநாயகர் ஆலய அரச மரத்தில் வைக்கப்பட்டிருந்த மேரி 15ஆம் ஆண்டுவிழா போஸ்டர் தட்டியைப் பகுதிப் பொறுப்பாளர்கள் செந்தில் தலைமையில் சென்று அகற்றினர். ஜெயராஜ் ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பைக் கண்டித்து பொள்ளாச்சியிலும் கரூரிலும் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்கைலாயத்தான்
அரசு உத்திரவு ரத்து!
சங்கரன்கோவிலில் அருள்மிகு உச்சினி மாகாளி அம்மன் கோவில் 1219 ச.அடி இடத்தைத் தனியாருக்குத் தாரைவார்த்ததைக் கண்டித்து இந்து முன்னணி தலைமையில் மக்கள் சக்தி திரண்டெழுந்து போராடியதைத் தொடர்ந்து அறநிலையத்துறை அதனை ரத்து செய்து உத்தரவிடுவது என மக்கள் கூட்டத்தில் அறிவித்தது!
அறநிலையத்துறை முற்றுகை!
நெல்லை, குமரி மாவட்டங்களில் அறநிலையத் துறைக்கு கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள், சொத்துகள் முறைகேடாக விற்பனை செய்யப்பட்டுள்ளதை விசாரணை நடத்தக்கோரி நெல்லை மண்டல அறநிலையத்துறை அலுவலகத்தை இந்து முன்னணி மாநிலத் துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமையில் மாவ. செயலாளர் உடையார், டி. செல்லபாண்டியன் மாவ.துணைத்தலைவர் வெட்டும்பெருமாள் மற்றும் பா.ஜ.க. மாவ. தலைவர் பாலசுப்பிர மணியன் மற்றும் கட்சிப் பொறுப்பாளர்கள் உடன் திரண்டனர்.
காவல்துறை அனுமதி மறுத்து அறநிலையத்துறை, இணை ஆணையர் தனபால் அவர்களிடம் மனு அளிக்க கேட்டுக்கொண்டனர்.
அதன் படி புகார் மனு நேரில் கொடுத்து புகார் சம்பந்தமான விளக்கங்களும் தரப்பட்டது.
மனுவில் கூறப்பட்டுள்ளதாவது..
கருப்பன் துறை கைலாச விநாயகர் கோவில் நிலம், சங்கரன் கோவில் சங்கரநாராயணசாமி கோயிலுக்குச் சொந்தமான கொங்கந்தான் பாறையில் உள்ள 15 ஏக்கர் 4 செண்ட் நிலம், பிள்ளையன் கட்டளை 10 ஏக்கர் நிலம், குறிச்சி சொக்கநாதர் ஆலத்திற்குச் சொந்தமான நிலம் ஆகியன முறைகேடாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இவை கோடிக்கணக்கான மதிப்புள்ளவை. பக்தர்கள் வசதிக்காகவும், கோயில் விழாக்களை நல்லமுறையில் நடத்திடவும் அளிக்கப்பட்ட இச்சொத்துகளை ஷீபா சிட்டி மற்றும் நெ.10 பீடி கம்பெனிக்கும் விற்பனை செய்துள்ளார்கள்.
மேலும் செப்பரை கோவிலுக்குச் சொந்தமான பல லட்சம் மதிப்புள்ள ஐம்பொன் சிலைகளை மாற்றி போலி சிலைகளை வைத்துள்ளதாகத் தெரிகிறது.
இவற்றை ஆய்வு செய்து இந்த முறைகேட்டிற்கு உடந்தையாக இருக்கும் அறநிலையத்துறை துணை ஆணையாளர் முத்து தியாகராஜன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
வி.பி.ஜெயக்குமார்
வெற்றிச் செய்தி
பொள்ளாச்சி அருகில் பல்லடம் அருகே உள்ள சிறுஞ்சேரி கிராம மக்கள் என்றும்போல் விவசாயம் செய்ய புறப்பட்டபோது இரண்டு பேர், கிறிஸ்தவர்கள் நமது கோயிலை இடித்துவிட்டு சர்ச் கட்டியுள்ளார்கள் எனக் கூறினார்கள்.
என்ன? எப்படி? நடந்தது எனக் கேட்டபோது இன்று காலையில் சர்ச் பாதிரி எங்களைத் தென்னங்கன்று வைக்க குழி தோண்ட அழைத்துச் சென்றார். குழி தோண்டிய போது பிள்ளையார் சிலையும், அம்மன் சிலையும் உள்ளேயிருந்து கிடைத்தன. நாங்களே எடுத்தோம், பாதிரியார் இதை யாரிடமும் சொல்லக்கூடாது எனத் தடுத்தார்.
கோயில் இருந்த இடத்தில் கோயில் சிலைகளைக் குழி தோண்டி புதைத்து விட்டு சர்ச் கட்டி உள்ளார்கள். இந்தச் செயலை மூடி மறைக்க அனைத்து வழிகளையும் கையாண்டனர். நாங்கள் அவருக்கு ஆதரவு கொடுக்கவில்லை எனக் கூறியவுடன் 4000 மக்கள் ஒன்று திரண்டு பாதிரியாரை விரட்டி விட்டு சர்ச் கட்டிடத்தை இந்துக் கோயிலாக மாற்றினார்கள்.
200 ஆண்டு கால அருள்மிகு செல்லாண்டி அம்மன் கோயில் மீட்கப்பட்டது. பாதிரியார் திட்டமிட்டு, கோயிலை மூடி மறைத்து சர்ச் கட்டிய செயலை இந்து மக்கள் ஒரே நாளில் முறியடித்தனர்.
வீறு கொண்டு எழுந்த இந்து சமுதாயம் சர்ச் கட்டிடத்தை இந்துக் கோயில் ஆக்கினார்கள். பூஜை வழிபாடு ஆரம்பமாகிவிட்டது. தாசில்தார் பேச்சு வார்த்தையில் இந்துக் கோயில் இருந்த இடத்தில் சர்ச் கட்டிய பாதிரியாரைக் கைது செய்யுங்கள் என்று கூறினர். பாதிரியார் தன்னை விட்டால் போதுமென ஊரை விட்டே ஓடிவிட்டார்.
கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்ட 20 இந்துக்கள் தாய்மதமான இந்து மதத்திற்குத் திருப்பி எடுக்கப்பட்டனர். வீறு கொண்டு எழுந்த இந்து மக்களின் எழுச்சியால் இந்துக் கோயில் மீட்கப்பட்டது. புதிய வரலாற்றை எழுத இந்து சமுதாயம் புறப்பட்டு விட்டது.
http://hindumunnani.org/pasuthai3.asp
No comments:
Post a Comment