Tuesday, July 22, 2008

சிறுபான்மை இடஓதுக்கீடு இந்துக்களுக்கு அநீதி! தட்டிக் கேட்போம்

சிறுபான்மை இடஓதுக்கீடு இந்துக்களுக்கு அநீதி! தட்டிக் கேட்போம்

தமிழ்நாடு அரசாங்கம் சிறுபான்மையினர் என்ற போர்வையில் முஸ்லீம், கிறிஸ்தவ சமுதாயத்திற்கு 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி கடந்த அக். 22, 2007இல் சட்டம் நிறைவேற்றியது.

ஆனால் அச்சட்டத்தின் உள்நோக்கம், தீமைகள் மற்றும் நமக்கு வர உள்ள பாதிப்புகள் பற்றி இந்து சமுதாயத்தினர் அறிந்திருக்கிறோமா? என்றால், இல்லை! இல்லை!!

ஜாதிய சங்கங்கள் இந்துக்களின் உரிமைகளைப் பறி கொடுத்து விட்டு, அரசுக்குச் சாமரம் வீசுகிறது!

* இந்துக்களைவிட அதிகம் படித்தவர்கள் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள். இதனை அரசாங்கத்தின் 2001ஆம் ஆண்டு ஜனத்தொகை கணக்கு தெரிவிக்கிறது. (காண்க பெட்டிச் செய்தி)

* ஒரு தனி மனிதருக்குப் பொன்விழா கொண்டாட பலநாள் சட்டசபையில் விவாதித்த அரசு 46% பிற்படுத்தப்பட்ட இனத்தவருக்கு எதிரான அவசர சட்டம் குறித்து ஒரு நிமிடம்கூட சட்டசபையில் விவாதிக்காமல் நிறைவேற்றியது ஏன்?

* வெறும் 10% உள்ள பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு 7% இடஒதுக்கீடு, ஆனால் 46% உள்ள பிற்படுத்தப்பட்ட இந்து மாணவர்களுக்கு 23% இது தான் சமூக நீதியா?

யாருக்கு இடஒதுக்கீடு?

இட ஒதுக்கீடு யாருக்குத் தேவை என்பதை நாம் அவசியம் புரிந்து கொள்ள வேண்டும். இட ஒதுக்கீடு என்பது நமது சமுதாயத்தில் சமூக ரீதியாக பின்தள்ளப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின்முன்னேற்றத்திற்காக புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களால் வழங்கப்பட்டது.

அரசு ஊழியர்களாகவும், தமிழக வியாபாரத்தையே தங்களது கட்டுக்குள் வைத்துக் கொண்டிருக்கும் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் எந்த வகையில் பிற்படுத்தப்பட்டவர்கள் ஆனார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது.

ஆகவே, கிராமங்களில் வயல்களிலும், பட்டறைகளிலும், நெசவு குடிசை களிலும் அரைவயிற்றுக் கஞ்சிக்கு அல்லல்படும் ஏழைகளின் குழந்தை களுக்கு இட ஒதுக்கீடு தேவையே தவிர நகரங்களில் சுகபோகமாக வாழும் கிறிஸ்தவ, முஸ்லீம்களுக்கு அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

* சிறுபான்மையினர் என்ற பெயரில் கல்வி நிறுவனங்கள் துவக்குவதில், மாணவர் சேர்க்கை, ஆசிரியர் நியமனம் ஆகியவற்றில் ஏற்கனவே முன்னுரிமை பெற்று நூற்றுக்கணக்கான நிறுவனங் கள் நடத்தி வருகிறார்கள்.

* பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் 90% சிறுபான்மையினர் பயன் பெற்று வருகையில் புதிதாக மத ரீதியான தனி இட ஒதுக்கீடு ஏன்?

இந்தச் செயல் வெட்டவெளிச்சமாக, பட்டவர்த்தனமாக பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி!

பிற்படுத்தப்பட்டோர்க்கான சலுகையை மீண்டும் 30% பெற்றிட..

மதரீதியான இட ஒதுக்கீட்டைத் தடை செய்திட..

இழந்த உரிமையை மீட்க..

வாருங்கள் போராடுவோம்..

வெற்றி பெறுவோம்...

ஒன்று திரண்டு எழுவோம்! வெற்றி பெறுவோம்!

ஜூலை 13ஆம் தேதி ஞாயிறு அன்று மாநிலம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் ஒரே நாளில் ஒன்றிய மற்றும் மாவட்டத் தலைமை இடங்களில் மாபெரும் ஆர்ப்பாட்டம் மாநில அரசே இந்துக்களுக்கு அநீதி இழைக்காதே!

சிறுபான்மை பாசத்தால் பெரும்பான்மைக்குத் துரோகம் இழைக்காதே!!

நன்றி
http://hindumunnani.org

No comments: