Tuesday, July 29, 2008

'ராம சேது' க்கு தேசிய நினைவுச் சின்ன தகுதி இல்லை : அரசு

'ராம சேது' க்கு தேசிய நினைவுச் சின்ன தகுதி இல்லை : அரசு
புதுடெல்லி (ஏஜென்சி), 29 ஜூலை 2008 ( 15:57 IST )


தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்படுவதற்கான தகுதிகளை ராமசேது கொண்டிருக்கவில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ராம சேது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷணன் தலைமையிலான அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு தரப்புல் ஆஜரான வழக்கறிஞர் எஸ். நாரிமன், ராம சேதுவை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக்கூடிய அளவிற்கு, அதற்கான விதிமுறைகளை பூர்த்தி செய்யக்கூடிய அளவிற்கான தகுதியை அது கொண்டிருக்கவில்லை என்று கூறினார்.

ராம சேது பாலத்தை இடிக்காமல் சேது சமுத்திர திட்டத்தை மாற்றுப்பாதையில் நிறைவேற்றுவது குறித்து பரிசீலிப்பதாகவும், இது குறித்து ஜூலை 29 ம் தேதியன்று தெரிவிப்பதாகவும் கடந்தவாரம் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்றைய விசாரணையின்போது அது குறித்து மத்திய அரசிடமிருந்து தமக்கு எந்த தகவலும் வரவில்லை என்றும், அநேகமாக இன்று மாலையோ அல்லது நாளை வரலாம் என எதிர்பார்ப்பதாகவும் நாரிமன் மேலும் கூறினார்.

No comments: