மதுரையில் பதுக்கி வைக்கப்பட்ட வெடிபொருட்கள் மீட்பு
செவ்வாய்க்கிழமை, ஜூலை 29, 2008
நன்றி தட்ஸ்டமில்.காம்
மதுரை: மதுரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான வெடிபொருட்களை நெல்லை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
நெல்லை மற்றும் சென்னையில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த திட்டமிட்டிருந்தது தொடர்பாக முகம்மது கபூர் என்பவரை நெல்லை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், மதுரை பாண்டி கோயில் பகுதியில், வெடிபொருட்களைப் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து நெல்லை போலீஸார் மதுரை விரைந்தனர். பாண்டி கோவில் பகுதியில் உள்ள ரிங் ரோடு பகுதியில், புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ வெடிபொருட்களை அவர்கள் பறிமுதல் செய்தனர்.
மதுரையில் வெடிபொருட்கள் சிக்கியதைத் தொடர்ந்து மதுரையிலும் சதிச் செயலுக்குத் திட்டமிடப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர். எனவே மதுரையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே மீனாட்சி அம்மன் கோயில் தீவிரவாதிகளின் ஹிட் லிஸ்ட்டில் முதலிடத்தில் இருப்பதாக மத்திய உளவுப் பிரிவு எச்சரித்துள்ளது நினைவிருக்கலாம்.
No comments:
Post a Comment