Thursday, July 24, 2008

48 சர்க்கஸ் பெண்கள் கற்பழிப்பு: பகுஜன் சமாஜ் முஸ்லிம் எம்.எல்.ஏ.வை கைது செய்ய ஆணை

48 சர்க்கஸ் பெண்கள் கற்பழிப்பு: பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ.வை கைது செய்ய ஆணை

முசாபர்நகர், ஜூலை 23: நேபாளத்தைச் சேர்ந்த 48 சர்க்கஸ் பெண்களை அடைத்து வைத்து கற்பழித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.வையும் அவரது சகோதரரையும் கைது செய்யுமாறு உத்தரப் பிரதேசத்தில் உள்ள முசாபர்நகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2003 ஜூன் மாதத்தில் உத்தரப்பிரதேசத்தில் ஒரு சர்க்கஸ் கூடாரத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 48 பெண்களை போலீஸôர் விடுவித்தனர். தங்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தி அடைத்து வைத்ததாக எம்.எல்.ஏ. மீதும் அவரது சகோதரர் மீதும் அந்த பெண்கள் புகார் கூறினர். அந்த புகாரின் அடிப்படையில் புலந்த்ஷார் தொகுதி எம்.எல்.ஏ. முகமத் அசிம், அவரது சகோதரர் முகமத் யூனுஸ் ஆகியோர் மீது போலீஸôர் வழக்குப் பதிவு செய்தனர்.

அந்த பெண்களை மருத்துவப் பரிசோதனை செய்ததில் அவர்கள் கற்பழிக்கப்பட்டது உண்மை என்று தெரியவந்தது. இந்தப் புகார்கள் இருந்தபோதிலும், கடந்த தேர்தலில் முகமத் அசிம், எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியபோதிலும் நீதிமன்றத்தில் அவரும் அவரது சகோதரரும் ஆஜராகவில்லை.

இதையடுத்து அவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கூடுதல் தலைமை ஜுடீஷியல் மாஜிஸ்திரேட் சுமித் சந்திரா உத்தரவிட்டுள்ளார்.

No comments: