வீறுகொண்டு எழுந்த இந்து சமுதாயம்!
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகாவில் ஏர்வாடி என்ற கிராமம் உள்ளது. சிறப்பு வாய்ந்த அருள்மிகு பெரிய நாயகி அம்மன் ஆலயம் உள்ளது. இந்து மக்கள் 65% பேர் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்து மக்கள் மத்தியில் ஒற்றுமை இல்லாத காரணத்தால் கடந்த சரஸ்வதி பூஜை சமயம் சரஸ்வதி பூஜை நடத்திய ஆட்டோ டிரைவர்களை முஸ்லீம் தீவிரவாதிகள் தாக்கினார்கள்.
அதன் பின்பு தாக்கியவர்களைக் கைது செய்யக் கோரி உண்ணாவிரதம் நடைபெற்றது. அரசு கடைசி வரை இந்துக்களைத் தாக்கியவர்களைக் கைது செய்யவில்லை. கைது செய்யாமல் வளர்த்து விட்டதால் தீவிரவாதிகளுக்குத் தெம்பு வந்தது.
தற்போது ஏர்வாடி அருகில் உள்ள கோசல்ராம் நகர் அரிஜன சமுதாய இந்து மக்கள் தெருவில் கோயில் திருவிழா காரணமாக 6508 அன்று அருள்மிகு பெரிய நாயகி அம்மன் கோயிலில் இருந்து தீர்த்தம் எடுத்துச் சென்றார்கள். பல கிராமங்களில் தீர்த்தம் எடுத்துச் செல்வது காலம் காலமாக நடந்து வருகிறது.
தற்போது ஏர்வாடி முஸ்லீம் தெருக்களில் தீவிரவாதம் வளர்ந்து வருவதால் இந்து சமய விழாக்கள், பண்டிகைகளைத் தடுக்கத் துவங்கினார்கள். 6508 அன்று தீர்த்தம் எடுத்துச் சென்ற போது திட்டமிட்டு தடுத்தார்கள்.
அச்சமயம் பக்கத்தில் நின்ற அனைத்து சாதியைச் சார்ந்தவர்களும் உடனே வீறு கொண்டு எழுந்து அரிஜன சமுதாய மக்களுக்குக் கை கொடுத்தார்கள். உங்களுக்கு ஒத்துழைப்பாய் இருக்கிறோம் என அனைவரும் திரண்டார்கள்.
முஸ்லீம் தீவிரவாதிகளுக்குத் தெரு பாதைகளை பட்டா செய்து கொடுக்கவில்லை. நாங்கள் சென்றே தீருவோம் என ஆதரவாக ரோட்டில் அமர்ந்தார்கள்.
உடனே தாசில்தார், டி.எஸ்.பி., போலீஸ் அதிகாரிகள் வந்தார்கள். முஸ்லீம் தரப்பில் பேசிய பின் அரசு அதிகாரிகள் இந்துக்களை சேரி வழியாக சுற்றிக்கொண்டு செல்லுங்கள் என்று கூறினார்கள். 3 கிலோ மீட்டர் சுற்றுப் பாதை என்பதுடன், காலகாலமாக நடந்து வரும் வழக்கத்தை மாற்றுவது என்ன நியாயம் என்று வெகுண்டெழுந்தனர் இந்துக்கள்.
பேச்சுவார்த்தை நடந்தது. மாவட்டக் கண்காணிப்பாளர் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களிடம் பேசி இந்து மக்கள் காலம் காலமாக தீர்த்தம் கொண்டு செல்கிறார்கள்; தடுக்கக்கூடாது. இந்து ஊர்வலத்தைத் தடுத்தால் உங்கள் மீது வழக்குப் போடுவேன் எனக் கூறினார்கள். முஸ்லீம்கள் பயந்து வழிவிட்டார்கள்.
இந்து மக்கள் ஒற்றுமையாக அரிஜன சமுதாயத்திற்கு உறுதுணையாக நின்றதால் இந்து மக்களுக்கு வெற்றி கிடைத்தது.
ஒற்றுமை என்றும் பலம், உறுதி என்றும் வெற்றி!
ப. சுடலை மணி,
1 comment:
தடுப்பது சிறுபான்மையினர் உரிமை.
Post a Comment