Sunday, July 20, 2008

கர்த்தர் சொன்ன பேச்சை கேட்காத பாம்பு

14. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப்பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டுமிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்;
And the LORD God said unto the serpent, Because thou hast done this, thou art cursed above all cattle, and above every beast of the field; upon thy belly shalt thou go, and dust shalt thou eat all the days of thy life:


ஹெஹ்ஹே ...

இதுதான் சாபமா?

பாம்பு அதற்கு முன்னால் பறந்துகொண்டிருந்ததா? பாம்பு வயிற்றால் நகர்ந்துகொண்டுதானே இருக்கிறது. அதனால்தானே அது பாம்பு?

இதெல்லாம் ஒரு சாபமா?

ஆனால், பாம்பு மண்ணை தின்னுமா? பாம்பு மண்ணை தின்பதாக ஒரு பயாலஜி புத்தகமும் சொல்லாது.

ஒரு பைபிள் விளக்க பக்கத்தில் பாம்பு முகர்வதற்காக நாக்கை நீட்டி புழுதியை டேஸ்ட் பார்க்கும். அதனால், அது மண்ணை தின்னும் என்று சொல்லலாம் என்று முழக்கியிருக்கிறார்.

அப்படி பார்த்தால் உலகத்தில் உள்ள எல்லா விலங்கினங்களும் முகரும்போது புழுதியில் உள்ள சிறு துகள்கள் மூக்கு வழியாக வாய்க்கு போகத்தானே செய்யும்? இதில் பாம்புக்கு மட்டுமென்ன தனி 'மண்ணை தின்பாய்' வாசகம்?

யூத பழங்குடி கதைகள் போல நகைச்சுவையானவை வேறெதும் இல்லை. அதுமட்டுமல்ல. அவற்றை பழங்குடி கதைகள் என்று படிக்காமல் ஏதோ உண்மையிலேயே நடந்ததாக நம்பும் ஏமாளி தமிழர்களை என்ன சொல்வது?

பரிதாபம்.

3 comments:

Anonymous said...

ஹாஹ் ஹ்ஹா

Anonymous said...

சூப்பர்

சிரித்துபுண்ணாகிவிட்டது.

Unknown said...

Hello bro.....தேவன் அதை கால்களோடு படைதிருக்லாம்....இன்னொன்று அது மிகவும் தந்திர்முள்ளது (ஆதியாகமாம் 3.1)..இந்த தவறை அந்த பாம்பு செய்ததால் தேவன் அதன் கால்களை எடுத்து சபித்து வயிற்றின் மூலம் ஊரும் படி செய்திருக்கலாமே......