குற்றாலம் பூங்காவில் வள்ளுவர், அகத்தியர், கம்பர் சிலைகள் உடைப்பு
ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 6, 2008
குற்றாலம்: குற்றாலம் பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர், அகத்தியர், கம்பர் போன்ற தமிழ் புலவர்களின் சிலைகளை சில விஷமிகள் அடித்து நொறுக்கியுள்ளனர்.
குற்றாலம் பேரூராட்சியில் உள்ள விஸ்வநாதராவ் பூங்காவில் உள்ள தடாகத்தில் சுற்றுலா பயணிகளையும், சிறுவர்களையும் கவருவதற்காக பேரூராட்சி சார்பில் ரூ.3 லட்சம் செலவில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் சிலைகள், கம்பர், இளங்கோவடிகள், வள்ளுவர், தமிழன்னை சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நள்ளிரவு சுமார் 20 பேர் கொண்ட கும்பல் திடீரென பூங்காவினுள் நுழைந்து அகத்தியர், திருவள்ளுவர், தொல்காப்பியர் ஆகிய மூவரின் சிலைகளில் உள்ள கைகளை மட்டும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
இதனை பூங்காவில் உள்ள இரவு காவலர்கள் தட்டிக் கேட்டதற்கு அவரையும் மிரட்டி விட்டுச் சென்றுள்ளனர்.
இந்த தடாகம் குற்றாலம் காவல்நிலையத்திற்கு நேரே பின்புறம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சுற்றுலா தலமான குற்றாலத்தில் காவல் நிலையம் அருகிலேயே விஷமிகள் தமிழ்ப் புலவர்களின் சிலைகளைச் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 comment:
வேறு யார்?
Post a Comment