மரபணுதான் பல்வெறு பிறப்பிலேயே இருக்கும் நோய் மற்றும் நோய் உபாதைகளின் ஆதாரம் என்பதனை கண்டறிந்து அவைகளை நீக்க ஆராய்ச்சி செய்யும் மூவருக்கு நோபல் பரிசு வழங்கியதன் மூலம் பரிணாமவியல் மற்றுமொரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஸ்டாக்ஹோம்: கருவிலிருக்கும் செல் மூலம் எலியின் மரபணுவை மாற்றி சாதனை படைத்ததற்காக, `ஸ்டெம் செல்' ஆராய்ச்சியாளர்கள் மரியோ கபெச்சி, மார்ட்டின் ஈவான்ஸ் மற்றும் ஆலிவர் ஸ்மித்திஸ் ஆகியோர், 2007ம் ஆண்டுக்கான நோபல் பரிசை வென்றுள்ளனர். உடலில் நோய் மற்றும் உபாதைகள் உண்டாக்கும் மரபணுக்களைக் கண்டறிந்து, அவற்றை நீக்குவதன் மூலம் நோயற்ற வாழ்வு வாழலாம் என்பதைக் கண்டறியும் பணியில் இந்த மூன்று அறிவியல் வல்லுனர்களும் ஈடுபட்டு வெற்றி கண்டவர்கள். இவர்களில் கபெச்சி, இத்தாலியில் பிறந்து அமெரிக்க பிரஜையானவர். ஈவான்ஸ், ஸ்மித்திஸ் ஆகியோர் பிரிட்டனில் பிறந்தவர்கள். இருவரில் ஸ்மித்திஸ் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளார். பாலுாட்டிகளின் உறுப்பு வளர்ச்சியில் ஈடுபடும் மரபணுக்களைக் கண்டறிந்ததால், அவற்றை ஒத்த மரபணுக்களைக் கொண்ட மனித இனத்தில் உள்ள கோளாறுகளைக் கண்டறியலாம் என்பதை, ஆராய்ச்சி மூலம் சொன்னவர் கபெச்சி. உடலில் கட்டிகளை ஏற்படுத்தும் மரபணுக்களைக் கண்டறிந்தவர் ஈவான்ஸ். தாலசீமியா என்ற ரத்த சம்பந்தப்பட்ட நோய், உயர் ரத்த அழுத்தம், ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுத்தும் மரபணுக்களைக் கண்டறிந்தவர் ஸ்மித்திஸ். மனித இனம் மிகப் பெரிய பயனை அடைய வழி வகுத்துள்ள இந்த ஆராய்ச்சியாளர்களுக்கு ஆறு கோடி ரூபாய் மதிப்புள்ள நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
2 comments:
இந்த பரிணாமவியலின் விளைவாக மருந்து கண்டுபிடித்தால், பரிணாமத்தை மறுக்கும் இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் மருந்துவேண்டாம் என்று சொல்வார்களா?
சூப்பர்
Post a Comment