சேது சமுத்திர திட்டம் பற்றி பேசும் போது, "எந்த" மதத்தினரது மனமும் புண்படாதவாறு பேச வேண்டும் என்று சோனியா கூறியிருக்கிறார்.
சேது சமுத்திர திட்டத்தின் போது எந்தெந்த மதத்தினர் மனம் புண்படும்படி பேசப்பட்டது? இந்து மதத்தினர்தானே? அதனை தெளிவாக "இந்துமதத்தினர் மனம் புண்படும்படி பேசியது தவறு" என்று சொல்லவேண்டியதுதானே?
**
எந்த மதத்தினரையும் புண்படுத்தும்படி பேசக்கூடாது : தி.மு.க.,-இடதுசாரிகள் மீது சோனியா தாக்கு
நன்றி தினமலர்
ஜாஜர்(அரியானா): "இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரிகள். சேது சமுத்திர திட்டம் வளர்ச்சிக்கான திட்டம்; இது குறித்து பேசும் போது, எந்வொரு மதத்தினரும் புண்படாதவாறு பேச வேண்டும்," என்று இடதுசாரிகள் மற்றும் தி.மு.க., கட்சிகளை காங்கிரஸ் தலைவர் சோனியா மறைமுகமாக தாக்கினார்.
அரியானா மாநிலம் ஜாஜர் அருகே ஜார்லி என்ற இடத்தில் ரூ. ஏழாயிரத்து 892 கோடி செலவில், ஆயிரத்து 500 மெகா வாட் திறன் கொண்ட சூப்பர் அனல் மின் நிலையத்துக்கு காங்., தலைவர் சோனியா நேற்று அடிக்கல் நாட்டினார். இக்கூட்டத்தில் உணர்ச்சிகரமான அவரது உரையின் விவரம் வருமாறு: நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. நாட்டின் முன்னேற்றம் தொடர்ந்து நடைபெற வேண்டுமானால், மின் உற்பத்தியும் அதற்கேற்றார் போல் அதிகரிக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு சில சக்திகள் இடையூறாக உள்ளன. அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்பது தேவை. இந்த சக்திகள் காங்., கட்சியின் எதிரி மட்டுமில்லாமல், நாட்டின் அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கான எதிரிகள். அவர்களுக்கு தகுந்த விதத்தில் பதில் கொடுப்பதற்கு நாம் எல்லாரும் ஒன்று சேர வேண்டும். நாட்டில் பல்வேறு துறைகளில் அபாரமான வளர்ச்சி கண்டு வருகிறது. இந்நிலையில், அதற்கேற்றார் போல மின் உற்பத்தியையும் அதிகரித்திட வேண்டும். இதை கருத்தில் கொண்டு தான் அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டில் ஒவ்வொரு துறைகளிலும் மின்சார தேவை அத்தியாவசியமாக உள்ளது. மக்களின் மின்சார தேவைக்காக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது.அதற்காகத் தான் அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம். ராமர் பாலத்தை அரசியலாக்குகின்றனர். இப்பிரச்னையில் தேவையில்லாமல் ராமர் பெயரை இழுக்கின்றனர். ராமர் பால பிரச்னையில் எந்த சமூகத்துக்கும் பாதிப்பும் இல்லாமல் தீர்வு காணப்படும். காங்., கட்சி அனைத்து மதத்தினருக்கும் சம மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்ற கருத்தைக் கொண்டுள்ளது. இந்த விஷயத்தில் மக்களின் மன உணர்ச்சியை பாதிக்கின்ற விதத்தில் எதுவும் நடைபெறாது என நாங்கள் நம்புகிறோம். சேது திட்டம் வளர்ச்சி திட்டம்.இதில் பல்வேறு ஆலோசனைகள் பற்றி பரிசீலிக்க வேண்டும். இதில் எந்த மதத்தினரின் மனதையும் புண்படுத்தும் வகையில் பேசக்கூடாது. இவ்வாறு காங்., தலைவர் சோனியா பேசினார். சோனியாவின் இந்த பேச்சு, ஆளும் காங்., கட்சி விரைவில் தேர்தலுக்கு தயாராகுவதைப் போல உள்ளது. இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்துக்கு ஆதரவாக அவர் பேசினாலும், நாட்டின் முன்னேற்றத்தின் எதிரிகள் என்று அவர் பேசியது, இடதுசாரிகளைத் தான் அவ்வாறு மறைமுகமாக குற்றஞ்சாட்டினார்.அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் இடதுசாரிகள் மத்திய அரசுக்கு முட்டுக்கட்டை ஏற்படுத்தி வருகின்றனர் என்பது இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. சேது திட்ட விவகாரத்தில் தி.மு.க.,வை நேரிடையாக தாக்காமல் மறைமுகமாக தாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
டில்லியில் பரபரப்பு : அரியானா பொதுக்கூட்டத்தில் அணுசக்தி விவகாரத்தில் இடதுசாரிகளையும், சேது திட்ட விவகாரத்தில் தி.மு.க.,வையும் சோனியா கடுமையாக தாக்கியது, டில்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாதுக்கூட்டத்தில் பேசுவதற்கான சோனியாவின் உரை ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டிருந்தது. அவரது பேச்சு உரையை அகில இந்திய காங்., மீடியா பிரிவு, பத்திரிகைகளுக்கு வழங்காமல் மறைத்து விட்டது. மா.கம்யூ., கட்சித் தலைவர்கள், சோனியாவின் உரையை முழுமையாக தெரிந்து கொண்ட பின்னர் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதாகக் கூறினர். தி.மு.க.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சிலர் டில்லி நிருபர்களிடம், சேது திட்டம் குறித்து சோனியா என்ன பேசினார் என்ற விவரத்தை சென்னையில் இருந்து கேட்டனர். இந்திய கம்யூ., தலைவர் ஏ.பி.பரதன், தொலைக்காட்சி செய்தியை பார்த்த பின் கருத்து தெரிவித்தார். மா.கம்யூ., கட்சி, சோனியா பேச்சின் உரையை கேட்டனர். அரியானா கூட்டத்தில் சோனியா இப்படி ஆவேசமாக பேசுவார் என்பது பெரும்பாலான மத்திய அமைச்சர்களுக்கும், எம்.பி.,க்களுக்கும், பத்திரிகைகளுக்கும் கூட முன்கூட்டியே தெரியவில்லை. வழக்கமாக காங்., மீடியா பிரிவு, சோனியா பேச்சின் முக்கிய அம்சங்களை ஒரு நாளுக்கு முன்னரே பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளுக்கு `அலர்ட்' செய்யும். இந்த முறை அப்படி நடக்கவில்லை. துாங்கி வழியும் ஞாயிற்றுக் கிழமையில் நடந்த இந்த கூட்டத்தில் சோனியாவின் பேச்சு இந்த அளவு பரபரப்பை ஏற்படுத்தும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.
No comments:
Post a Comment