மேலூர், ஆக. 11: காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதல் சம்பவத்தில் மேலூர் மணப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எப்.) வீரர் உயிரிழந்தார்.
மணப்பட்டியைச் சேர்ந்த விவசாயி சின்னக்கருப்பன். இவரது மகன் மலைச்சாமி (36) எல்லைப் பாதுகாப்புப் படை பிரிவில் காஷ்மீரில் பணியாற்றி வந்தார். சில தினங்களுக்கு முன் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் மலைச்சாமி இறந்ததாக அவரது வீட்டுக்குத் தகவல் வந்தது.
அவரது உடல் சனிக்கிழமை (ஆக. 11) மணப்பட்டிக்குக் கொண்டுவரப்படுகிறது.
கடந்த 17 ஆண்டுகள் எல்லைப் பாதுகாப்புப் படையில் பணிபுரிந்த அவர் பணியிலிருந்து ஓய்வு பெற இன்னும் 8 மாதங்கள் உள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர்.
மலைச்சாமிக்கு மனைவி ராஜாத்தி, மகன், மகள் உள்ளனர்
--
இஸ்லாமிய பயங்கரவாதிகளோடு போராடி வீரமரணம் எய்திய மலைச்சாமிக்கு வீரவணக்கம்.
No comments:
Post a Comment