Monday, October 01, 2007

பதவி சுகத்துக்காக புறமுதுகிட்ட புறநானூற்று வீரம் - விஜயகாந்த்

உண்ணாவிரதம் விஜயகாந்த், சரத் சாடல்

சென்னை : `சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், கருணாநிதி அரசு பதவி விலகுவதே முறையாகும்' என, விஜயகாந்த் கூறியுள்ளார். இது குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை: காலை 9 மணிக்கு உண்ணாவிரதத்தை தொடங்கிய கருணாநிதி, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பினால் அரண்டுபோய் 11.30 மணிக்கு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு, அவசர அவசரமாக கோட்டைக்கு சென்று, அதிகாரிகள் மூலம் அவரே பந்தை முறியடிக்க உத்தரவு வழங்கினார். அவர் இருந்த இரண்டரை மணிநேரம் உண்ணாவிரதத்தில் அடங்குமா என்பது தெரியவில்லை. ஆனால், புறநானுற்று வீரம் புறமுதுகிட்டு ஓடியது என்பது மட்டும் உண்மை. மானத்தைக் கருதியாவது கருணாநிதி அரசு பதவி விலகுவதே முறையாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் விடுத்த அறிக்கையில், `உண்ணாவிரத போராட்டம் என்று முதல்வர் கருணாநிதி நடத்தி இருப்பது, அவருக்கும் அவருடைய கூட்டணிக் கட்சிகளுக்கும் எப்படியாவது அரசியல் விளம்பரம் பெற்றுவிட வேண்டும் என்ற ஆர்வமும், அவசரமுமே மேலோங்கி இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.

நன்றி தினமலர்

No comments: