வெறுப்பை விதைத்தவர்கள் வன்முறையை அறுவடை செய்கிறார்கள். இந்தியாவின் ஜாதிகளுக்குள்ளே பரஸ்பரம் வன்முறையையும் வெறுப்பையும் விதைத்து தஙகளது கிறிஸ்துவ அறுவடைக்கு விளைநிலம் தேடியவர்கள், ஜாதிவெறிக்கு இந்துமதத்தின் மீது பழி போட்டவர்கள், இன்று தாங்கள் விதைத்த வெறுப்பின் விளைவை தங்கள் மதத்தின் உள்ளேயே பார்க்கிறார்கள்.
ஜாதிவெறியை ஊட்டி வளர்த்தவர்கள் அந்த ஜாதிவெறியாலேயே கெட்டபெயரை சுமக்கிறார்கள்.
நன்றி மாலைமலர்
==
வெறிச்சோடியது எறைïர் கிராமம்: கலவரத்தில் ஈடுபட்டதாக2 ஆயிரம் பேர் மீது வழக்கு
விழுப்புரம், மார்ச்.10-
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறைïர் கிராமத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கிறிஸ்தவர்களும், தலித் கிறிஸ்தவர்களும் வசித்து வருகிறார்கள். இங்குள்ள புனித ஜெபமாலை அன்னை தேவாலயத்தில் வழிபாடு நடத்தும் போது தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக தலித் மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. கடந்த 3 மாதமாக இந்த பிரச்சினை நீடித்தது.
தலித் மக்கள் தனியாக ஒரு தேவாலயத்தை உருவாக்கி தங்கள் தேவாலயத்தை தனிப்பங்காக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே இருந்த பிரச்சினை உச்சக்கட்டத்தை அடைந்தது.
இதைத் தொடர்ந்து நேற்று காலை அங்கு கலவரம் வெடித்தது. காலனி பகுதிக்குள் ஒரு பிரிவினர் புகுந்து தாக்கினார்கள். வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. பொருட்கள் சூறையாடப்பட் டன. இதைப் பார்த்ததும் காலனி மக்கள் அலறி அடித்து ஓடினார்கள்.
தகவல் அறிந்ததும் போலீ சார் அங்கு விரைந்து சென்ற னர். வீடுகளை சேதப்படுத்தி யவர்களை கைது செய்ய முயன்றபோது போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டினார்கள். ஆனாலும் தொடர்ந்து அவர்கள் கல்வீசியதால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் எறைïரைச் சேர்ந்த பெரியநாயகம் (வயது 42) மகிமை ராஜ் (25) ஆகிய 2 பேர் பலியானார்கள். 30 பேர் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர் ந்து ஒரு பிரிவினர் ஊரை விட்டு சென்று விட்டனர். ஆண்கள் யாரும் வீட்டில் இல்லை. பெண்களும் குழந்தைகளும் மட்டுமே உள்ளனர். இதனால் ஊர் வெறிச்சோடி காணப் படுகிறது.
தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவுகிறது. இதையொட்டி விழுப்புரம், பெரம்பலூர், காஞ்சீபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த 500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர்.
டி.ஐ.ஜி. வன்னிய பெரு மாள், போலீஸ் சூப்பிரண்டு கள் அமல்ராஜ், பெரியய்யா ஆகியோர் அங்கு முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட் டுள்ளனர். புனித ஜெபமாலை அன்னை ஆலயத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.
கலவரம் தொடர்பாக எலவனாசூர் கோட்டை போலீசில் தாசில்தார் ரங்க நாதன் புகார் செய்துள்ளார். அதில் கலவரத்தில் வீடுகள் உடைப்பு மற்றும் போலீசார் மீது கல்வீசி தாக்கியதாக குழந்தைசாமி, மார்டின், அல்போன்ஸ், தனிலால், தேவதாஸ், கிறிஸ்தவராஜ், மரிய செல்வம், ஆனந்தஅம்புரோஸ், அப்போலி உள்பட 2 ஆயிரம் பேர் ஈடுபட்டதாக குறிப் பிட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மரியசெல்வம் உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் ஊராட்சி மன்ற தலைவர் ஆரோக்கியதாஸ் கொடுத்த புகாரில் ஆதிதிரா விடர்கள் உண்ணாவிரதம் இருந்தபோது மேத்ï, அந்தோணி சாமி உள்பட பலர் மைக்மூலம் சாதி கலவரத்தை தூண்டும் வகையில் பேசி கொலை மிரட் டல் விடுத்ததாக கூறியுள்ளார்.
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆசிர்வாதம் கொடுத்த ஒரு புகார் மனுவில் கலவரத்தை தூண்டும் வகையில் மேத்ï, அந்தோணிசாமி ஆகியோர் நோட்டீஸ் ஒட்டியதாக குறிப் பிட்டுள்ளார். இதையொட்டி மேத்ï, அந்தோணி சாமி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. மேலும் பொது இடத்தில் பொதுமக்களை தாக்கி பேசியதாக கடுவன் என்ற ஜெய்சங்கர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள் ளது. அவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
கலவரம் நடந்த பகுதிக்கு அமைச்சர்கள் பொன் முடி, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் ஆகியோர் நேற்று சென்றார்கள். சேதப்படுத் தப்பட்ட வீடுகளை பார்வை யிட்டார்கள்.
மாதாகோவிலில் பாதிரி யார் எலியாஸ், முன்னாள் ஊராட்சி மன்ற தலை வர்கள் ஆசிர்வாதம் குழந்தை சாமி ஆகியோரை சந்தித்து நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள் அமைச்சர்களின் காலில் விழுந்து கதறி அழுதனர்.தடியடி நடத்தி தடுத்திருக்க வேண்டிய கலவரத்தை துப்பாக்கியால் சுட்டு 2 பேரை பலியாக்கிவிட்டனர் என்று போலீஸ் சூப்பிரண்டு அமல்ராஜ் மீது புகார் தெரிவித்தனர். அமைச்சர்கள் அவர்களை சமாதானப் படுத்தினார்கள். துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று கூறினார்கள்.
2 comments:
//வன்முறையையும் வெறுப்பையும் விதைத்து தஙகளது கிறிஸ்துவ அறுவடைக்கு விளைநிலம் தேடியவர்கள், ஜாதிவெறிக்கு இந்துமதத்தின் மீது பழி போட்டவர்கள், இன்று தாங்கள் விதைத்த வெறுப்பின் விளைவை தங்கள் மதத்தின் உள்ளேயே பார்க்கிறார்கள்.
//
முத்தான வார்த்தைகள்!
கிறிச்துவம் போன எந்த நாடும் உருப்பட்டதில்லை
Post a Comment