டாக்டர்கள் 38%, விஞ்ஞானிகள் 36% அமெரிக்காவில் இந்தியர்கள் சாதனை
புதுடில்லி: அமெரிக்க நிறுவனங்களில் இந்தியர்களின் ஆதிக்கம் பெரிதும் அதிகரித்து வருகிறது. அங்கு பணியாற்றும் டாக்டர்களில் 38 சதவீதம் பேர் இந்தியர்கள்; நாசா விஞ்ஞானிகளில் 36 சதவீதம் பேர் இந்தியர்கள்.
பெப்சி நிறுவனத்தின் இந்திரா நுõயி, சிட்டி வங்கியின் விக்ரம் பண்டிட், ஸ்டீல் மனிதர் லட்சுமி மிட்டல் மட்டும் வெளிநாடுகளில் கோலோச்ச வில்லை. வெளிநாடுகளில், பல்வேறு துறைகளிலும் இந்தியர்கள் கொடிகட்டிப் பறக்கின்றனர். அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகளில் 12 சதவீதம் பேர் இந்தியர்கள். நாசாவில் உள்ள விஞ்ஞானிகளில் 36 சதவீதத்தினர் இந்தியர்கள். கம்ப்யூட்டர் நிறுவனங்களான மைக்ரோசாப்ட்டில் 34 சதவீதம் பேர், ஐ.பி.எம்., நிறுவனத்தில் 28 சதவீதம் பேர், இன்டெலில் 17 சதவீதத்தினர், ஜெராக்ஸ் நிறுவனத்தில் 13 சதவீதம் பேர் இந்தியர்கள்.
இதற்கு காரணம் இந்தியாவின் உயர்கல்வி முறை சிறப்பாக இருப்பது தான் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆராய்ச்சி படிப்பு முடிப்போரின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிஎச்.டி., பட்டம் பெற்றவர்கள் எண்ணிக்கை 17 ஆயிரத்து 898. தற்போது இது, 18 ஆயிரத்து 730 ஆக உயர்ந்துள்ளது.
No comments:
Post a Comment