Sunday, March 23, 2008

கிறிஸ்தவ மதத்தில் வன்னியர் ஆதி திராவிடர் மோதல் ஜாதி மோதல்: ஏராளமான சர்ச்கள் மூடல்

சர்ச்களில் வன்னியர் ஆதி திராவிடர் மோதல் காரணமாக கடலுõர், விழுப்புரம் மாவட்டங்களில் பல சர்ச்களில் வழக்கமான பிரார்த்தனைகள் நடைபெற வில்லை. கிறிஸ்தவ மதத்தில் ஜாதி கொடுமைகள் இதன் மூலம் அம்பலத்துக்கு வந்துள்ளது. உளுந்துõர்பேட்டை அடுத்த எறையூரில் கிறிஸ்தவ ரோமன் கத்தோலிக் பிரிவை சேர்ந்த வன்னியர் 14 ஆயிரம் பேரும், கிறிஸ்தவ ஆதிதிராவிடர் 1000 பேரும் வசிக்கின்றனர். இவர்கள் வழிபடுவதற்காக 1887ம் ஆண்டு பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த பொத்தேரோ என்பவரால் "புனித ஜெபமாலை அன்னை ஆலயம்' என்ற சர்ச் கட்டப்பட்டது. வழிபாடுகளில் இருபிரிவினரும் பங்கேற்று வந்தனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், கிறிஸ்தவ ஆதி திராவிடர்கள் தரப்பில் சகாய மாதா அன்னை ஆலயம் கட்டி அதிலிலும் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஆலய திருவிழாக்களில் கிறிஸ்தவ ஆதி திராவிடர் பெண்களை, வன்னிய கிறிஸ்தவ இளைஞர்கள் செல் போனில் படம் எடுத்ததால், இவர் களுக்குள் மோதல் ஏற்பட்டது. சகாயமாதா அன்னை ஆலயத்தை அங்கீகாரம் செய்து தனி பங்காக அறிவிக்க வேண்டும் என, குழு அமைத்து புதுச்சேரிகடலுõர் மறைமாவட்ட பேராயருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 9ம் தேதி ஆதி திராவிடர் கிறிஸ்தவர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதனை நிறைவேற்றாததை கண் டித்து கடந்த 7ம் தேதி சகாயமாதா அன்னை ஆலயத்தில் கிறிஸ்தவ ஆதி திராவிடர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இரண்டு நாட்கள் தொடர்ந்து நடந்து வந்தபோதும் பேராயர் தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லாததால் விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் கடந்த 8ம் தேதி "தேவாலயத்தை பூட்டு' என சர்ச்சைக்குரிய போஸ்டர் ஒட்டினர். கடந்த 9ம் தேதி காலை 8.30 மணிளவில் தேவாலயத்தில் கூடிய வன்னியர் கிறிஸ்தவர்கள் ஆத்திரமடைந்து ஆதி திராவிடர் கிறிஸ்தவர்கள் பகுதிக்குள் புகுந்து உண்ணாவிரதம் இருந்தவர்களை தாக்கினர். சில வீடுகளையும் சேதப்படுத்தினர். போலீசார் நிலைமையை சீர்செய்ய முயன்றபோது வன்னியர் கிறிஸ்தவர்கள் கற்களால் தாக்குதல் நடத்தினர். நிலைமை மோசமானதால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் இருவர் பலியாகினர். கடந்த 8ம் தேதி வன்னியர் கிறிஸ்தவர்களின் நான்கு வீடுகள் மற்றும் வைக்கோல் போர் மர்ம நபர்களால் தீவைத்து எரிக்கப்பட்டது. இதனால் மீண்டும் பதட்டம் ஏற்பட்டது.

இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக மறைமாவட்ட பேராயர் அந்தோணிராயர் வெளியிட்ட அறிக்கையில், எறையூர் பங்கு ஆலயம் மற்றும் இதற்கு செல்லும் பாதை, கல்லறை தோட்டம் அனைவருக்கும் பொதுவானது. திருவிழாவின் போது தேர் செல்லும் வீதிகளோடு, வடகுரும்பூர் ரோட்டில் உள்ள புனித அசிசி மருத்துவமனை வரை (ஆதி திராவிடர் கிறிஸ்தவர்கள் வசிக்கும் பகுதி) சென்று வரும் என அறிவித்தார். ஆத்திரமடைந்த வன்னியர் கிறிஸ்தவர்கள் எறையூர் மக்களுக்கு தெரியப் படுத்தாமல் அறிக்கை வெளியிட்ட பேராயருக்கு எதிர்ப்பு தெரிவித்து, புனித ஜெபமாலை ஆலய பங்குதந்தை எலியாசிடம் மனு கொடுத்தனர். இந்தப் பிரச்னை தொடர்பாக திண்டிவனத்தில் நேற்று விழுப்புரம் கலெக்டர், பேராயர் தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது.

பிற பகுதிகளிலும் எதிர்ப்பு: எறையூர் மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து முகையூர் ஆர்.சி., சர்ச்சில் ஆதி திராவிட கிறிஸ்துவர்களுக்கு சம உரிமை வழங்க மறுக்கும் பேராயரை கண்டித்தும், அனைத்துக் கட்டத்திலும் சம உரிமை வலியுறுத்தியும் பாதிரியாரை வெளியேற்றி விட்டு கோவிலை மூடினர். கருப்பு துணிக் கட்டி எதிர்ப்பைத் தெரிவித்தனர். அத்திப்பாக்கத்திலும் ஆதி திராவிட கிறிஸ்துவர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. செஞ்சி தாலுகா அணிலாடி பகுதி கிறிஸ்வர்கள் துõய இருதய ஆண்டவர் தேவலயத்தின் கதவுகளைப் பூட்டி, பாதிரியார்களை திருப்பி அனுப்பியுள்ளனர். தேவாலயத்தின் தினசரி வழிபாடுகள் நிறுத்தப் பட்டுள்ளன. துரிஞ்சிப் பூண்டி துõய இருதய ஆண்டவர் தேவலயத்தில் கருப்பு கொடியேற்றி கோவிலை பூட்டிவிட்டு, பாதிரியாரை திருப்பி அனுப்பியுள்ளனர்.

விழுப்புரம் தாலுகா நங்காத்துõர் தேவலயம், கல்லேரி (கணக்கன் குப்பம்) தேவாலயத்தில் பாதிரியாரை திருப்பி அனுப்பியதுடன், பூஜைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. கடலுõர் மாவட்டத்தில் பண்ருட்டி பகுதியில் மட்டும் சில இடங்களில் தேவாலயங்களுக்கு பூட்டு போட்டுள்ளதால் வழிபாடு நடக்கவில்லை.கடலுõர் வட்டத்திற்குட்பட்ட வழுதலம் பட்டு, அழகப்பசமுத்திரம், கிருஷ்ணன்குப்பம், சிறு தொண்டமாதேவி, சாத்தமாம்பட்டு ஆகிய ஊர்களில் உள்ள தேவாலயங்களில் வழிபாடு நடக்கவில்லை.
நமது சிறப்பு நிருபர்

தினமலர்

3 comments:

Anonymous said...

இந்தியாவில் ஜாதிகளுக்கு இடையே முன்பு இருந்திராத விரோதத்தை உருவாக்கியவர்கள் கிறிஸ்துவ மிஷநரிகள்.

இன்று அவர்களது சமயத்திலேயே அது வெடிக்கிறது.

ஆனால் பழியை இந்துமதத்தின் மீது கூசாமல் போடுவார்கள்.

முற்போக்கு வாந்திகளும் கூடவே வாந்தியெடுக்கும்.

எழில் said...

கருத்துக்கு நன்றி

Dharmaraj said...

என்னதான் வெடித்தாலும் அவன் வெளியே சொல்லமாட்டான்
நாம்மவர்கள் நம் கண்களையே குத்துவார்கள்