தினமலர் செய்தியில் விநாயகர் கோவில் அருகே சிலுவை வைத்தால் பிரச்னை என்று தனது வேலையை திரும்பவும் காட்டியுள்ளது.
விநாயகர் கோவில் அருகே சிலுவை இருந்தால் என்ன பிரச்னை? ஒரு பிரச்னையும் இல்லை.
ஏன் வேளாங்கண்ணி மாதா கோவில் எதிரில் மாபெரும் விநாயகர் கோவில் கட்டுங்களேன். ஏன் வேண்டாம் என்றா நமது கிறிஸ்துவ சகோதரர்கள் சொல்லப்போகிறார்கள்?
நாகூர் தர்கா நேர் எதிரில் பெரிய மாரியம்மன் கோவில் கட்டுங்களேன்.
இஸ்லாமிய சகோதரர்கள் வேண்டாம் என்றா சொல்லப்போகிறார்கள்?
விநாயகர் கோவில் அருகே சிலுவை வைத்ததால் பிரச்னை
பெரியகுளம் : பெரியகுளம் நகராட்சி வளாகத்தில் விநாயகர் கோவில் அருகே சிலுவை வைக்கப்பட்டதால் பதட்டம் ஏற்பட்டது.
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி வளாகத்தில், வரம் தரும் விநாயகர் கோவில் பல ஆண்டுகளாக உள்ளது. கோவில் சுற்றுச்சுவர் சேதமடைந்ததால் கான்ட்ராக்டர் ராசு, நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பக்தர்கள் கொடுத்த பணத்தை வைத்து சுற்றுச்சுவர் புதுப்பிக்கப்படுகிறது. நேற்று காலை 8 மணிக்கு சிலர் விநாயகர் கோவில் அருகே சிலுவையை வைத்து வழிபடச் சென்றனர். இதை அகற்றக்கோரி விஸ்வ இந்து பரிஷத், பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நகாராட்சி கமிஷனர் சுப்ரமணியன், தலைவர் சீதாலட்சுமி, துணைத் தலைவர் அப்துல் சமது, கவுன்சிலர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில், நகராட்சி வளாகத்தில் அத்து மீறி வைக்கப்பட்ட சிலுவையை அகற்றுவது, வாட்ச்மேன் மச்சக்காளை மீது நடவடிக்கை எடுப்பது என முடிவு செய்யப்பட்டது.
2 comments:
இது கேள்வி!
அதானே?
Post a Comment