Friday, March 28, 2008

சர்ச்சில் திருமணம் நடத்த எதிர்ப்பு : ஆர்.டி.ஓ., பேச்சுவார்த்தையில் தீர்வு

சர்ச்சில் திருமணம் நடத்த எதிர்ப்பு : ஆர்.டி.ஓ., பேச்சுவார்த்தையில் தீர்வு

தக்கலை: தக்கலை அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் வைத்து திருமணம் நடந்த ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பதட்டமான சூழல் நிலவியது. இதனையடுத்து ஆர்.டி.ஓ., தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்பட்டது. தக்கலை அருகே பூக்கடை, கல்வெட்டான்குழியில் ஒரு கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் வைத்து திருமணம் நடத்த கோர்ட்டில் தடை உத்தரவு அமலில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று பூக்கடையை சேர்ந்த மேரி, கூட்டமாவை சேர்ந்த ஜாண்குமார் ஆகியோருக்கு இந்த ஆலயத்தில் வைத்து திருமணம் நடப்பதாக இருந்தது. இத்தகவலை அடுத்து இதற்கு ஒரு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்தில் மாவட்ட பா.ஜ., தலைவர் வேல்பாண்டியன், மூத்த தலைவர் காந்தி, மாநில இளைஞரணி தலைவர் கோபகுமார், மாவட்ட பொது செயலாளர் கிருஷ்ணன், துணைத்தலைவர் ரமேஷ், ஒன்றிய பொருளாளர் தங்கப்பன், முன்னாள் மாவட்ட பஞ்., துணைத்தலைவர் முருகராஜன், இந்து முன்னணி மாவட்ட தலைவர் ஆசீர்வாதம், மாவட்ட பொது செயலாளர் சோமன் உட்பட இந்து அமைப்பினரும், முளகுமூடு வட்டார முதல்வர் ஜார்ஜ் பொன்னையா, முன்னாள் எம்.எல்.ஏ., குமாரதாஸ் மற்றும் பங்குப்பணியாளர்கள் சிலரும் கூடினர்.

இதனால் பதட்டமான சூழல் நிலவியது. இதனையடுத்து சம்பவ பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும் பத்மனாபபுரம் ஆர்.டி.ஓ., ரவீந்திரன், கல்குளம் தாசில்தார் கனகசபாபதி, குளச்சல் டி.எஸ்.பி., பரமானந்தம், இன்ஸ்பெக்டர்கள் பொன்சங்கர், நல்லகண்ணு, கணேசன் ஆகியோர் சம்பவ இடம் வந்தனர். தொடர்ந்து அதிகாரிகள் தரப்பில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் ஆலயத்தில் வைத்து திருமணம் நடத்துவதில்லை என தீர்வு ஏற்பட்டது. இதனையடுத்து ஜாண் குமார், மேரி ஆகியோருக்கு சம்பந்தப்பட்ட ஆலயத்தின் அருகில் உள்ள ஒரு வீட்டில் வைத்து திருமணம் நடந்தது

No comments: