சென்னை: தமிழகத்தில் பழமைவாய்ந்த கோயில்கள் ரூ. 9.87 கோடி செலவில் பழுது நீக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட இருப்பதாக தமிழக அரசு செய்தி தெரிவிக்கிறது.
தமிழகத்தில் மீனாட்சி அம்மன், தஞ்சை பெரிய கோயில் உட்பட புகழ்பெற்ற பழமை வாய்ந்த பல்வேறு கோயில்கள் உள்ளன. கி.பி., 8, 9 நுõற்றாண்டுகளில் கட்டப்பட்ட கோயில்கள் தற்போதும் தமிழகத்தில் புகழ்பெற்று விளங்குகின்றன. காலப்பழமையின் காரணமாக இக்கோயில்கள் பழுதடைந்து உள்ளன. அவற்றைச் சரி செய்ய 12வது திட்டக் கமிஷனில் இருந்து ரூ.9.87 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு வட்டராங்கள் தெரிவிக்கின்றன. முதற்கட்டமாக 48 கோயில்கள் சரி செய்யப்பட உள்ளன.
நன்றி தினமலர்
No comments:
Post a Comment