Thursday, June 28, 2007

சென்னை விமானநிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை விமானநிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: பபோலீசார் அதிரடி சோதனை

ஆலந்தூர், ஜுன். 25-


சென்னை விமான நிலைய கட்டப்பாட்டு அறைக்கு இன்று அதிகாலை 3 மணிக்கு ஒரு மர்ம மனிதன் போனில் பதட்டத்துடன் பேசினான். விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. சர்வதேச விமான நிலையத்தில் அந்த குண்டு இன்னும் 15 நிமிடத்தில் வெடிக்கும் என்று கூறினான். பேசுவதுயார்ப எங்கிருந்து பேசுகிறீர்கள் என்று கேட் பதற்குள் போனை வைத்து விட்டான்.

இதனால் விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக போலீசாருக்கும், மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

உடனே வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் வந்து தீவிர சோதனை நடத்தினர்.

உள்நாட்டு விமான நிலையத்திலும் சர்வதேச விமானநிலையத்திலும் ஒரு இடம்விடாமல் தீவிரமாக சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்க வில்லை.

அதிகாலை 3மணி என்ப தால் அப்போது விமானம் எதுவும் அங்கு இல்லை.

லண்டன் ,துபாய் செல்லும் பயணிகள் தான் முன்கூட் டியே விமானநிலையத்துக்கு வந்திருந்தனர். விமானநிலைய நுழைவு வாயிலை மூடி பயணிகளிடமும் போலீசார். தீவிர சோதனை நடத்தினர். 15 குழுவாக பிரிந்து அதிகாலை 6மணி வரை சோதனை நடத்தியும் வெடிகுண்டு எது வும் சிக்கவில்லை. எனவே இது ஒரு புரளி என்ற முடிவுக்கு வந்தனர்.

இதற்கிடையே பன்னாட்டு விமான புறப்பாடு பகுதியில் ஒரு பெட்டி அனாதையாக கிடந்ததை போலீசார் பார்த் தனர். அது வெடிகுண்டாக இருக்கலாம் என கருதி அதன் அருகே யாரையும் அனும திக்கவில்லை.

பெட்டியின் சொந்தக்காரர் உடனே அந்த பெட்டியை எடுத்து செல்லலாம் என மைக்கில் தகவல் தெரி விக்கப்பட்டது. ஆனால் யாரும் வந்து பெட்டியை எடுக்க வில்லை.

உடனே வெடிகுண்டு நிபு ணர்கள் அந்த பெட்டியை திறந்து பார்த்த போது அதில் மாம்பழம் தான் இருந்தது. இதனால் அந்த பெட்டியை விமானநிலைய மானேஜர் அறையில் ஒப்படைத்து விட்டனர்.

அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை போலீசார் சோதனை நடத்தியதால் அங்கு பரபரப்பான நிலைகாணப்பட்டது.

No comments: