26,செவ்வாய், ஜூன் 2007
ஆனி 12 தினமலர்
05. காஷ்மீர் பிராமணர்களிடம் மன்னிப்பு: திரும்ப வரும்படி ஹூரியத் அழைப்பு
ஜம்மு: காஷ்மீர் பிராமணர்களுக்கு இழைக் கப்பட்ட கொடுமைகளுக்காக மன்னிப்பு கேட்பதாக ஹூரியத் அமைப்பு அறிவித்துள்ளது. காஷ்மீரில் இருந்து வெளியேறிய அவர்கள் மீண்டும் தங்கள் சொந்த பகுதிக்கு திரும்ப வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளளது. இதற்காக, மூன்று அம்ச திட்டத்தையும் அறிவித் துள்ளது.
காஷ்மீரில் பயங்கரவாதம் தலை துõக்கிய பிறகு, அங்கு வசித்து வந்த பல்லாயிரக்கணக்கான பிராமணர்கள் தங்கள் சொத்து மற்றும் உடைமைகளை விட்டு வெளியேறினர். டில்லி உட்பட பல நாட்டின் பல பகுதிகளில் அவர்கள் அகதிகளாக தங்கியுள்ளனர். அவர்கள் மீண்டும் தங்கள் சொந்த பகுதிக்கு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. தற்போது அதற் கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பேச ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டு இருந்தது. காஷ்மீரில் மிர்வாஸ் உமர் பரூக் தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் ஹூரியத் அமைப்பின் ஜம்மு பகுதி பிரதிநிதியும், அமைப்பின் செய்தி தொடர் பாளருமான சலீம் கிலானி இந்த கூட்டத்தில் பேசியதாவது: காஷ்மீரில் கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களுக்கு அனைத்து தரப்பினருமே பொறுப்பு ஏற்க வேண்டும். காஷ்மீரில் இருந்து பிராமணர்கள் வெளியேறியதற்கு குறிப்பிட்ட சமுதாயம் தான் காரணம் என்று கூறிவிட முடியாது.
காஷ்மீர் பிராமணர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்கவும் எங்கள் அமைப்பு தயாராக உள்ளது. மேலும், காஷ்மீர் பிராமணர்கள் தங்கள் சொந்த பகுதிக்கு திரும்ப எங்களிடம் மூன்று அம்ச திட்டம் ஒன்று உள்ளது. அதன் முதல் கட்டமாக காஷ்மீர் பிராமணர்களுக்கு தலைமை பொறுப்பு ஏற்றுள்ளவர்கள், காஷ்மீருக்கு வரவழைக்கப்படுவர். காஷ்மீரில் உள்ள மக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களுடன் அவர்கள் சகஜமாக பேச ஏற்பாடு செய்யப் படும். இதன் மூலம் பிராமணர் களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தப்படும். இரண்டாவது கட்டமாக இரண்டு தரப்பிலும் உள்ள எழுத்தாளர்கள், கலைஞர்கள், இலக்கியவாதிகள் ஆகியோரை அழைத்து சிறப்பு மாநாடுகளுக்கு ஏற்பாடு செய்வோம். மூன்றாவது கட்டமாக பிராமணர்கள் காஷ்மீருக்கு மீண்டும் வர, எவை எவை தடையாக உள்ளது என்பதை கண்டறிந்து அந்த தடைகளை அகற்ற முயற்சிகள் மேற் கொள்ளப்படும். ஆக்கிரமிப்பில் உள்ள பிராமணர்களின் சொத்துக்கள் மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும். காஷ்மீரில் இருந்து பிராமணர்கள் வெளியேறுவதை தடுத்து, மாநிலத்துக்குள்ளேயே அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசும் கூறியுள்ளது. இவ்வாறு சலீம் கிலானி பேசினார்.
2 comments:
இன்றைய காஷ்மீரில் உள்ள நிலைமைக்கு இந்த முட்டாள் பிராமணர்கள்தான் முழுக் காரணம் 1947க்கு முன் மன்னர் ஹரிசிங் அவர்கள் காஷ்மீரில் முஸ்லீமாக மதம் மாறிப்போனவர்கள் தாய் மதம் திரும்ப ஏற்பாடு செய்தார் அப்பொழுது இந்த பிராமணர்கள் அங்கிருந்த சட்-லஜ் நதியில் கழுத்தளவு நீரில் நின்றுகொண்டு மஹாராஜா உடனடியாக இந்த யாகத்தை நிறுத்தாவிட்டால் தாங்கள் அத்துணை பேரும் ஜலசமாதி அடைவோம் என்றும் மிரட்ட, இதனால் பிரம்மஹஸ்த்தி தோஷம் வந்துவிடுமோ என்று பயந்த மஹாராஜா உடனடியாக அந்த யாகத்தை நிறுத்தினார். இந்த செயலை செய்ததற்கான பலனைத்தான் காஷ்மீர் பிராமணர்கள் இன்று அனுபவித்து வருகின்றனர்
காஷ்மீர் பிராமணர்கள் அனைவரும் வந்த பின் ஒட்டுமொத்தமாக சுட்டுக்கொன்றுவிட்டு காஷ்மீர் பிராமணன் என்ற இனமே இல்லாமல் செய்தாலும் செய்வார்கள். இவர்களை நம்பவே கூடாது.
Post a Comment