Saturday, June 09, 2007

கஞ்சா கடத்திய மதுரை கன்னியாஸ்திரிக்கு ஆதரவு தந்த சிறைத்துறை டி.ஐ.ஜி., இடமாற்றம்

கஞ்சா கடத்தியகன்னியாஸ்திரிக்கு ஆதரவு தந்த சிறைத்துறை டி.ஐ.ஜி., இடமாற்றம்

மதுரை: மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்கு "கஞ்சா' கடத்திய கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக செயல்பட்ட சிறைத்துறை டி.ஐ.ஜி., எஸ்ரா, திருச்சி மத்திய சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்கு வாரம் தோறும் சனி, ஞாயிறுகளில் கல்வி கற்பிக்க கிறிஸ்தவ கன்னியாஸ்திரி அனஸ்திகா (45), சிறைத்துறை டி.ஐ.ஜி., எஸ்ராவிடம் சிறப்பு அனுமதி பெற்றிருந்தார். இதையடுத்து ஒன்றரை ஆண்டுகளாக சிறைக்குள் சென்று கைதிகளுக்கு கல்வி கற்பித்து வந்தார். சம்பவத்தன்று சிறைக்கு வந்த கன்னியாஸ்திரியை சிறைக்காவலர்கள் எதார்த்தமாக சோதனை செய்தனர். அப்போது அவரது "அங்கிக்குள்' கஞ்சாவை மறைத்திருப்பதை கண்டுபிடித்தனர். கஞ்சாவும், கையுமாக சிக்கிய கன்னியாஸ்திரி குறித்து, அப்போது டில்லியில் இருந்த டி.ஐ.ஜி., எஸ்ராவிடம் காவலர்கள் தெரிவித்தனர். கன்னியாஸ்திரி விடுவிக்கும்படி டி.ஐ.ஜி., உத்தரவிட்டார். இதையடுத்து கன்னியாஸ்திரி விடுவிக்கப்பட்டார். இதுகுறித்து பத்திரிகைகளில் செய்தி வெளியாகின. கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக செயல்படும் டி.ஐ.ஜி., மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வேறுவழியின்றி சிறைத்துறை புகாரின் பேரில் கன்னியாஸ்திரியை, அப்போதைய கரிமேடு இன்ஸ்பெக்டர் காட்வின் ஜெகதீஷ்குமார் கைது செய்தார். சிறை கைதிகளுக்கு கஞ்சா கொடுத்து கன்னியாஸ்திரி மதம் மாற்றியதாகவும், அதற்கு துணை போன சிறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி பல்வேறு அமைப்பினர் அரசிடம் புகார் தெரிவித்தனர். இதன் எதிரொலியாக டி.ஐ.ஜி., எஸ்ரா திருச்சி மத்திய சிறைக்கும், அங்கிருந்த டி.ஐ.ஜி., மூர்த்தி மதுரை மத்திய சிறைக்கும் நேற்றிரவு இடமாற்றம் செய்யப்பட்டனர். கோவை டி.ஐ.ஜி.,யாக இருந்தபோது எஸ்ரா மீது மத ரீதியாக செயல்படுவதாக புகார் எழுந்தது. அதன் எதிரொலியாக அவர் மதுரைக்கு கடந்தாண்டு இடமாற்றம் செய்யப்பட்டார். தற்போது இதே பிரச்னை காரணமாக திருச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



நன்றி தினமலர்

1 comment:

Anonymous said...

இதுமாதிரி எல்லா மட்டங்களிலும் கிரித்துவர்கள் ஊடுருவி இருக்கிறார்கள்..