Monday, August 04, 2008

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன

ஆர்எஸ்எஸ் ஊழியர் மீது தாக்குதல்
Monday, 04 August, 2008 12:30 PM
.
கன்னூர், ஆக.4: கேரள மாநிலம் கன்னூரில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்த 2 ஊழியர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரால் தாக்கப்பட்டுள்ளனர்.
.
கன்னூர் மாவட்டம் தாளசேரி அருகே உள்ளது பனூர். இங்கு ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் சுரேஷ்பாபு மற்றும் தினேஷ் ஆகிய இருவரும் தங்கள் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது தாளசேரி அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவர்கள் இருவரையும் பயங்கர ஆயுதங்களால் கடுமையாக தாக்கியுள்ளது.
இதில் படுகாயமடைந்த அந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களது கழுத்து உள்ளிட்ட பல இடங்களில் வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளது என்றும், அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments: