Thursday, August 21, 2008

கடலூர் மாவட்டத்தில் 508 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை-இந்து முன்னணி ஏற்பாடு

கடலூர் மாவட்டத்தில் 508 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை
இந்து முன்னணி ஏற்பாடு


கடலூர், ஆக.21-

கடலூர் மாவட்டத்தில் 508 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய இந்து முன்னணி ஏற்பாடு செய்து வருகிறது.

விநாயகர் சதுர்த்தி

வருகிற செப்டெம்பர் 3-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பல்வேறு அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெற உள்ளன. கடலூர் மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பிலும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இது குறித்த ஆலோசனைக்கூட்டம் மஞசக்குப்பம் துக்காராம் பஜனை மடத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு இந்து முன்னணி மாவட்ட தலைவர் கிருஷ்ண கதிரவன் தலைமை தாங்கினார். பொது செயலாளர் தங்கவேல், பொருளாளர் ராமமூர்த்தி, செயலாளர் வீரபாகு ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

508 இடங்களில்

கூட்டத்தில், `வருகிற 3-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாடுவது, இதையொட்டி மாவட்டம் முழுவதும் 508 இடங்களில் 3 அடி முதல் 10 அடி வரையிலான விஸ்வரூப விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வது என்றும், மாவட்டம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி நாளான வருகிற 3-ந் தேதி விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து 3 நாள் கொண்டாட்டங்களுக்கு பிறகு வருகிற 5-ந்தேதி வெள்ளிக் கிழமை தேவனாம்பட்டினம் கடலில் விசர்ஜனம் செய்வது` எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments: