Thursday, August 21, 2008

கிருஷ்ண ஜெயந்தி: கோவில்களுக்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் மிரட்டல்

கிருஷ்ண ஜெயந்தி: கோவில்களுக்கு தீவிரவாதிகள் மிரட்டல்
வியாழக்கிழமை, ஆகஸ்ட் 21, 2008



டெல்லி: கிருஷ்ண ஜெயந்தி அன்று தாக்குதல் நடத்தப் போவதாக மிரட்டல் கடிதம் வந்துள்ளதால் டெல்லி கோவில்களுக்கு தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வரும் 24ம் தேதி ஜென்மாஷ்டமி எனும் கிருஷ்ண ஜெயந்தி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் பிறந்தநாள் அன்று கோலாகலமாக கொண்டாடப்படும்.

இந் நிலையில் பெங்களூர், அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலைத் தொடர்ந்து, கிருஷ்ண ஜெயந்தி அன்றும் தாக்குதல் நடத்தப்படும் என்று டெல்லி அரசுக்கு காஷ்மீர் தீவிரவாதிகள் என்ற பெயரில் மிரட்டல் கடிதம் வந்துள்ளது.

இந்தக் கடிதம் எங்கிருந்து அனுப்பப்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரியவில்லை. இந்த கடிதத்தை உள்துறைக்கு அனுப்பியுள்ளோம் என்று டெல்லி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து டெல்லி போலீஸ் துறை மக்கள் தொடர்பு அதிகாரி ராஜன் பகத் கூறுகையில். பண்டிகையை முன்னிட்டு கோவில்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மெட்டல் டிடக்டர், சிசிடிவி மூலம் கோவில்கள் கண்காணிக்கப்பட்டுள்ளது. ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

இதற்கிடையில் ஜென்மாஷ்டமியை ஒட்டி அனைத்து கோவில்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகப்படுத்தும்படி பிரபல பிர்லா மந்திர் கோவில் உள்பட அனைத்து கோவில்கள், குருத்வார் மற்றும் மசூதிகளுக்கு டெல்லி துணைநிலை ஆளுனர் ராஜேந்தர் கண்ணா உத்தரவிட்டுள்ளார்.

1 comment:

Anonymous said...

மாற்றுமத சகோதரர்களுக்கு அழகிய விளக்கம் அளிக்கிறார்கள்

அவ்வளவுதான்